30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl4485
கேக் செய்முறை

பனீர் கேக்

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ்ஷான முழு கிரீம் மில்க் – 1 லிட்டர்,
எலுமிச்சைப்பழம் பெரியது – 1-2,
சர்க்கரை – 50 கிராம்,
குங்குமப்பூ – சிறிது,
ஏலக்காய் விதைகள் இடித்தது – சிறிது,
பிஸ்தா அல்லது பாதாம் சீவியது – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாலை நன்கு காய்ச்சி இறக்கி 5 நிமிடம் கழித்து எலுமிச்சைச்சாறுடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து, இறக்கிய பாலில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு ஒரே பக்கத்தில் கலக்கவும். அந்த பால் திரியும் வரை கிளறவும். அது திரிந்து பனீர் திரிந்ததும், நிறுத்தி மெல்லிய துணி கொண்டு வடித்து, 2 முறை தண்ணீரில் பிசைந்து பிசைந்து அலச வேண்டும். அதில் புளிப்பு போய் விடும். தண்ணீரை முற்றிலும் பிழிந்து வடித்து, ஒரு தாம்பாளத்தில் கொட்டி, கையால் மிதமாக சாஃப்ட்டாக
வரும்வரை பிசையவும்.

இதில் குங்குமப்பூ, நைஸாக பொடித்த சர்க்கரை சேர்த்து சாஃப்ட்டாக பிசையவும். ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் இந்தக் கலவையைக் கொட்டி 2 நிமிடம் வதக்கவும். இதில் ஏலக்காய் சேர்த்து ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும் அல்லது பேடா மாதிரி உருட்டி அலங்கரிக்கவும்.sl4485

Related posts

உருளைக்கிழங்கு பான்கேக்

nathan

பிளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

வாழைப்பழ பான் கேக்

nathan

சீஸ் கேக்

nathan

ரஸமலாய் கஸாட்டா

nathan

அரிசி மாவு கேக்

nathan

அன்னாசி பழ கேக்

nathan

சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக்

nathan

மாம்பழ கேக் புட்டிங்

nathan