சில சமயங்களில் மக்கள் தங்கள் பற்களை வெண்மை ஆக்கவும், நல்ல அழகான சருமம் பெறவும், உடல் நலத்தை காக்கவும் எதை வேண்டுமானாலும் முயற்சி செய்வார்கள். சந்தையில் அறிமுகமாகும் அனைத்து பொருட்களையும் வாங்கி பயன்படுத்துவார்கள்.
ஒருசிலர் இப்படி இருக்க, ஒருசிலர் ஆயுர்வேதா, நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம் பின்பற்றுவார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க கை வைத்தியம் அல்லது சொந்த வைத்தியம் என்று ஒன்றிருக்கிறது. அதாவது, வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை வைத்தே மருத்துவம் பார்ப்பது.
அப்படி பற்களை வெண்மையாக்க பலவன இருக்கின்றன அதில் வாழைப்பழ தோல், ஆரஞ்சு தோல் போன்றவை நாம் கேள்விப்பட்டிருப்போம். இப்போது பிரெட்டை வைத்தும் பற்களை வெண்மை ஆக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்….
பிரெட்! முதலில் புதியதாக தயாரிக்கப்பட்ட ப்ரெஷ் பிரெட்டை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சன்னமாக இல்லாமல், கொஞ்சம் அடர்த்தியாக ஸ்லைஸ் போன்ற வெட்டிக் கொள்ளுங்கள்.
ஸ்டவ்! அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் அடுப்பை பற்ற வைக்க வேண்டும். அதில் நீங்க அடர்த்தியாக வெட்டி வைத்துக் கொண்டுள்ள பிரெட்டை டோஸ்ட் செய்ய வேண்டும்.
டோஸ்ட்! ப்ரௌனீஸ் ப்ளாக் ஆக வரும் வரை பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளுங்கள். ப்ரௌனீஸ் கருமை நிறம் வந்தப்பின் பிரெட்டை எடுத்துவிடுங்கள்.
பற்களில் தேய்க்க வேண்டும். டோஸ்ட் செய்த பிரெட்டை இரண்டாக வெட்டி, பற்களில் 3 – 4 நிமிடங்கள் வரை தேய்த்து கொடுக்க வேண்டும். உண்மையில் இப்படி செய்து வர டூத்பேஸ்ட் பயன்பாட்டை விட இது பற்கள் நல்ல வெண்மை பெற உதவும்.
கரி! இது ஒன்றும் புதுமையான முறையல்ல. காலம், காலமாக நாம் பின்பற்றி வந்த கரி பயன்படுத்தி பல் துலக்கும் முறை தான். இதை தான் சில மேற்கத்திய நாடுகளில் அதிசயமாக கண்டு பிரெட்டை கருக்கி பயன்படுத்துகின்றனர்.