26.2 C
Chennai
Thursday, Dec 26, 2024
sl4462
சிற்றுண்டி வகைகள்

லசாக்னே

என்னென்ன தேவை?

லசாக்னே ஷீட் (பெரிய சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்.) அல்லது மைதா சப்பாத்தி – 8 ( 2 கப் மைதாவில் 1 டீஸ்பூன் எண்ணெயும், உப்பும் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாக செய்யவும்.
துருவிய மொசெல்லா சீஸ்- 1 கப்,
வேக வைத்த காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பிரக்கோலி) – 1 கப் (இந்தக் கலவையில் மிளகுத்தூள், உப்பு, தைம் மற்றும் ரோஸ்மெரி மசாலா சிறிது சேர்த்துக் கலந்து வைக்கவும்).
தக்காளி பியூரி – 2 கப்,
தக்காளி சாஸ் அல்லது கெட்ச்சப் – 2 டீஸ்பூன்,
ஒயிட் சாஸ் – சிறிது (2 டீஸ்பூன் வெண்ணெயை சூடாக்கவும். அதில் அரை கப் மைதா சேர்த்து கருகாமல் வறுக்கவும். 2 கப் பாலை சிறிது
சிறிதாக சேர்த்து பேஸ்ட் போலச் செய்யவும். கால் கப் சீஸ், சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் ஒயிட் சாஸ் ரெடி).

எப்படிச் செய்வது?

ஒரு பேக்கிங் டிரேயை எடுத்துக் கொள்ளவும். தக்காளி கெட்ச்சப்பை தக்காளி பியூரியுடன் கலந்து முதலில் டிரேயில் ஒரு லேயர் பரப்பவும். அதன் மேல் லசாக்னே ஷீட் அல்லது சப்பாத்தியால் மூடவும். அதில் காய்கறிக் கலவையை பரத்தவும். அதன் மேல் ஒரு லேயர் ஒயிட் சாஸ் ஊற்றவும். அதன் மேல் துருவிய சீஸ் ஒரு லேயர் போடவும். அதே போல இன்னொரு முறை செய்யவும். 180 டிகிரிக்கு 20 முதல் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.sl4462

Related posts

குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா

nathan

கேரட் புதினா புலாவ் செய்ய வேண்டுமா…..?

nathan

சத்தான கோதுமை ரவா தோசை

nathan

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

பனீர் நாண்

nathan

சுவையான அரிசி பக்கோடா

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா வெங்காய பக்கோடா

nathan

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

nathan