27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld45753
தலைமுடி அலங்காரம்

கூந்தல் சொன்னபடி கேளு… மக்கர் பண்ணாதே!

இன்று பின்னல் போடாமல், தலைமுடியை விரித்து விட்டுக் கொண்டு போகலாம் என நினைத்திருப்பீர்கள். ஆனால், அன்றைக்குப் பார்த்து உங்கள் கூந்தல் தேங்காய் நார் மாதிரி முரடாக மாறி பிடிவாதம் பிடிக்கும். இன்னொரு நாள் அழகாக பின்னல் போட்டுச் செல்ல விரும்பியிருப்பீர்கள். அன்றும் உங்கள் கூந்தல் அதற்கு ஒத்துழைக்காது. கூந்தல் என்பது எப்போதும் நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்காது. எப்போதாவது கேட்டால் ஆச்சரியம்.

உங்கள் அபிமான நடிகை அல்லது பிரபலத்தின் ஹேர் ஸ்டைலை பார்த்து, மாய்ந்து போயிருப்பீர்கள்… ச்சே… அவங்களுக்கு மட்டும் தலைமுடி எவ்ளோ அழகா இருக்கில்லை… என நீங்கள் வியந்து போவதன் பின்னணியில் ஒரு ரகசியம் இருக்கிறது. யெஸ்… பிரபலங்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் உங்கள் கூந்தல் சொன்னபடியெல்லாம் கேட்கும். அதற்குத் தேவை சிலபல ஸ்டைலிங் பொருட்கள். அவ்வளவே! எல்லோருக்கும் இயற்கையிலேயே அழகான, ஆரோக்கியமான கூந்தல் அமைவதில்லை. ஒவ்வொருவரின் கூந்தலும் ஒவ்வொரு விதமானது. எப்படிப்பட்ட கூந்தலையும் நமது விருப்பப்படி மாற்றிக் கொள்ள ஸ்டைலிங் பொருட்கள் பயன்படுகின்றன. இவை கூந்தலின் தன்மை மற்றும் வடிவத்தை மாற்றக்கூடியவை.

சரியான பொருட்களை சரியான முறைப்படி உபயோகித்தால் கூந்தலுக்குப் பாதிப்புகள் இருக்காது. ஆனாலும், பெரும்பாலான ஹேர் ஸ்டைலிங் பொருட்களில் ஆல்கஹால் கலப்பு இருப்பதால், அது இயற்கையான எண்ணெய் பசையை முற்றிலும் நீக்கி விடும். சில வகை ஸ்டைலிங் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள், கூந்தலை பொலிவிழக்கச் செய்து, பொடுகு மற்றும் அரிப்பைக் கொடுக்கும். கூந்தலை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிற வகையில் இன்று ஏகப்பட்ட ஸ்டைலிங் பொருட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

ஹேர் வாக்ஸ்

மெழுகு கலந்த இந்த ஹேர் வாக்ஸ், கூந்தலை நமது விருப்பப்படி ஸ்டைல் செய்ய உதவும். இது மற்ற ஜெல்களை போல கூந்தலில் கடினமாகப் படியாது. பல வருடங்களாக புழக்கத்தில் இருக்கிறது.

ஹேர் மூஸ்

கூந்தலுக்கு அதிகப்படியான பளபளப்பையும் அடர்த்தியையும் கொடுக்கக்கூடியது. இது ஸ்பிரே மற்றும் கிரீம் வடிவங்களில் கிடைக்கிறது. கூந்தல் லேசான ஈரத்துடன் இருக்கும் போதே இதை உபயோகிக்க வேண்டும். தடவியதும் அது சீராகப் பரவ தலையை வார வேண்டும்.

ஹேர் ஜெல்

கூந்தலை குறிப்பிட்ட ஒரு ஸ்டைலுக்கு ஏற்றபடி உறுதியானதாக மாற்ற, பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட ஹேர் வாக்ஸ் போன்றதுதான் இதுவும். ஆனாலும், அதைவிட சற்றே ஸ்ட்ராங்கானது.

ஹேர் ஸ்பிரே

ஹேர் ஜெல், ஹேர் வாக்ஸ் மற்றும் ஹேர் க்ளூ ஆகிய எல்லாவற்றையும் விடவும் சற்றே பலவீனமானது. நீண்ட நேரத்துக்கு குறிப்பிட்ட ஸ்டைலில் முடியை வைத்திருக்க இதைப் பயன்படுத்துவதுண்டு. இதில் Polymer மற்றும் Elastesse ஆகியவையே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் பாலிமர் என்பது பிளாஸ்டிக் கலந்தது. எலாஸ்டெஸ் என்பதும் கெமிக்கல் கலவையே. சில வகை ஹேர் ஸ்பிரேக்கள் ஆல்கஹாலில் கரைக்கப்பட்ட வெஜிடபுள் கம் மற்றும் இயற்கையான பாலிமர் கொண்டு தயாரிக்கப்படுவதுண்டு. ஒருவித மரத்தில் இருந்து எடுக்கப்படுகிற Gum Arabic அப்படியொரு இயற்கையான பொருள்தான்.

ஹேர் வால்யூமைசர்

எலிவால் போல மெலிந்த கூந்தலுக்கு தற்காலிகமாக அடர்த்தியையும் பளபளப்பையும் ஆரோக்கியமான ஒரு தோற்றத்தையும் தரக்கூடியது. வழுக்கைப் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருக்கிற ஆண்கள், இதை உபயோகித்து, இருக்கும் கொஞ்சூண்டு முடியை அடர்த்தியாகக் காட்டிக் கொள்வதுண்டு. இது ஷாம்பு, கண்டிஷனர், ஸ்பிரே, லோஷன் போன்ற பல வடிவங்களில் கிடைக்கிறது. ஹேர் வால்யூமைசர்களில் Humectants என்கிற பொருள் இருக்கும். அது சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதத்தை எல்லாம் இழுத்துக் கொண்டு, முடிக்கற்றைகளை உப்பினாற் போலச் செய்வதால், கூந்தல் அடர்த்தியாகக் காட்சியளிக்கிறது. இதில் உள்ள வேறு வேறு பாலிமர் தொகுப்பு, முடிக்கற்றைகளின் மேல் படிந்து, அதற்கு அடர்த்தியானதும் பளபளப்பானதுமான தோற்றத்தைத் தருகின்றன. ஷாம்பு மற்றும் கண்டிஷனர் வடிவிலான வால்யூமைசர்களை அப்படியே பயன்படுத்தலாம்.

இந்தப் பொருட்களின் பொதுவான சேர்க்கைகள்…

கற்றாழை

தாவரப் பொருளான இதில் வைட்டமின் கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை இருப்பதால் கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். கூந்தல் மிருதுவாகவும் இருக்கும்.

செராமைடு

இவை ஒருவகையான கொழுப்பு அமிலங்கள். கூந்தலின் வெளிப்புற கியூட்டிகிள் பகுதியில் உள்ள இடைவெளிகளை நிரப்புபவை. ஷாம்புவுடன் சேர்க்கப்படும் போது இது கூந்தல் உடைவதைத் தவிர்க்கிறது.

Coenzyme Q 10 ஷாம்புவில் சேர்க்கப்படும் போது, கூந்தல் கியூட்டிகிள் பகுதிகளை ஆரோக்கியமாக வைத்து, பளபளப்பாக்குகிறது. கூந்தலை சிக்கின்றி வாரி, ஸ்டைல் செய்ய ஏதுவாக மாற்றுகிறது.

Ginseng Root Extract இதுவும் கூந்தலுக்கு பலத்தைக் கொடுத்து, நுனிகள் வெடிப்பதைத் தவிர்க்கக்கூடியது.

கஃபைன்

கூந்தலின் வேர்க்கால்களைத் தூண்டி, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படுகிற அனைத்துப் பொருட்களிலும் இது சேர்க்கப்படும்.

Macadamia Oil இதில் இயற்கையான கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்ட கூந்தலை சரியாக்கி, நுனிப் பிளவுகளை சீராக்க உதவும்.

Panthenol இது கூந்தலுக்கு அதிக ஈரப்பதத்தைக் கொடுக்கக்கூடியது. அதனால் கூந்தல் இயற்கையிலேயே ஆரோக்கியமாகத்தோற்றமளிக்கும்.

Silk Proteins கூந்தலின் பளபளப்புக்கு உதவக் கூடியவை.

நல்லெண்ணெய்

இதைப் பற்றிப் புதிதாகப் பேச ஒன்றுமில்லை. இந்த எண்ணெயில் உள்ள linoleic அமிலம், சென்சிட்டிவான மற்றும் பாதிக்கப்பட்ட மண்டைப் பகுதிக்கு இதமளிக்கக்கூடியது. இவை எல்லாம் கூந்தலுக்கு நன்மை செய்கிற மாதிரி சில வகையான கெமிக்கல்கள் கூந்தலை பெரியளவில் பாதிப்பதும் உண்டு. அப்படிச் சில…

சிலிக்கான்

Dimethicone and Cyclomethicone எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இது கூந்தலுக்கு உடனடிப் பளபளப்பையும் பட்டு போன்ற மென்மையையும் கொடுக்கக்கூடியது என்றாலும், இதைப் போன்ற கூந்தல் எதிரி வேறு இருக்க முடியாது. தொடர்ந்து உபயோகிக்கிற பட்சத்தில் கூந்தலின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இது கலந்த ஸ்டைலிங் பொருட்களைத் தவிர்ப்பதே சிறந்தது.

செயற்கை நறுமணம்

வாசனையே சேர்க்காத ஸ்டைலிங் பொருட்களைத் தான் உபயோகிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இயற்கையான வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்டவை பாதுகாப்பானவை. செயற்கை நறுமணங்கள், அரிப்பைக் கொடுக்கும். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களின் சருமத்தைப் பாதிக்கும்.

Isopropyl Alcohol Rubbing alcohol என்கிற பெயரில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதை நீங்கள் தவிர்த்தே ஆக வேண்டும். இது மிகவும் ஆபத்தானது. மூச்சின் வழியே உள்ளே போனால், நச்சுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியது. இது உடனடியாக வறண்டு போகும் தன்மை கொண்டது என்பதால் கூந்தலின் எண்ணெய் பசை முழுவதையும் நீக்கி, கூந்தலை வறளச் செய்துவிடும்.

Sodium Lauryl Sulfate பெரும்பாலும் ஷாம்பு பாட்டில்களில் இவற்றைப் பார்க்கலாம். நுரை வருவதற்காக சேர்க்கப்படுகிற இதுவும் மோசமான கெமிக்கல்தான். கூந்தலையும் சருமத்தையும் அதிக அளவில் வறண்டு போகச் செய்வதுடன், உள்ளே ஊடுருவி, ரத்தத்தில் கலந்து புற்றுநோய்க்குக் காரணமான விஷயங்களைத் தூண்டுவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, இத்தகைய ஸ்டைலிங் பொருட்களை உபயோகிப்பதன் மூலம் கூந்தல் உங்கள் விருப்பத்துக்கேற்ப வசப்படும் என்பதென்னவோ உண்மைதான். மோசமான கூந்தலுக்கு ஆரோக்கியமான, அழகான தோற்றம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தொடர்ந்து உபயோகித்தால் அவற்றில் உள்ள கெமிக்கல் கூந்தலின் இயற்கையான எண்ணெய் பசை மற்றும் நிறத்தை அழித்து கூந்தலை பலவீனமாக்கும்
என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.ld45753

Related posts

ஹேர் கலரிங் பாதுகாப்பானதா?

nathan

எளிமையான ஹேர் ஸ்டைல்கள்

nathan

தலைமுடி பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்

nathan

இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் இத படிங்க!

sangika

உங்கள் தலையில் உள்ள ஹேர் டை கறையை போக்கனுமா?

nathan

இளநரை ஏன் ஏற்படுகிறது?.. இவை தான் காரணங்களாக இருக்கலாம்…

sangika

சுமாரான கூந்தல் அடர்த்தியாக தெரியனுமா? இந்த ஸ்ப்ரேக்களை உபயோகிங்க!!

nathan

கலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!

nathan

முடியின் வளர்ச்சி நேராகவும், நீளமாகவும் உள்ளதென்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் நண்பர்களே!…

sangika