26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
e8
மருத்துவ குறிப்பு

காய்ச்சிய எண்ணெய்! மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்!!

காய்ச்சிய எண்ணெய்

தேவையானவை:

நல்லெண்ணெய் – 2 லிட்டர்
பசும்பால் – 200 மில்லி
வெற்றிலை – 3
இஞ்சி – ஒரு துண்டு (தட்டிக்கொள்ளவும்)
ஓமம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – ஒரு டீஸ்பூன் (தட்டிக்கொள்ளவும்)
சீரகம் – ஒரு டீஸ்பூன் (தட்டிக் கொள்ளவும்)

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியில் நல்லெண்ணெயை சேர்த்து சூடுபடுத்தவும். இத்துடன் பசும்பாலையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். வெற்றிலையைக் கிழித்துவைத்துக் கொள்ளவும். எண்ணெயின் சலசலப்பு சத்தம் நின்றவுடன், வெற்றிலைத் துண்டுகள், காய்ந்த மிளகாய், தட்டிய இஞ்சி, ஓமம் ஆகியவற்றைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மிளகு, சீரகம், சேர்த்து அடுப்பை விட்டு இறக்கி, ஆற விடவும். பிறகு வடிகட்டி சுத்தம் செய்த கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடிவைக்கவும். 3 மாதம் வரை வெளியில் வைத்து உபயோகிக்கலாம்.

குறிப்பு:

வாரம் ஒரு முறை இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உச்சந்தலையில் தினமும் ஒரு சொட்டு தொட்டுவைத்தால் இருமல், சளித் தொல்லை வராது. எண்ணெயோடு பால் சேர்வதால், முதலில் இரண்டும் ஒட்டாது. பிறகு கொதிக்க வைக்கும்போது இரண்டும் ஒன்றாகும். காய்ச்சும் போது பால் பொங்கி வருவது போல இதில் பொங்காது.e8

Related posts

பாட்டி வைத்தியத்தில் சில வைத்திய குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பல் முளைக்கும் பாப்பாவின் ஈறுகளைப் பாதுகாக்கும் டீத்தர்!

nathan

தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்

nathan

உயிரை குடிக்கும் சிகரெட்

nathan

எந்த கஷ்டமும்படாம உங்க உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா -அற்புதமான எளிய தீர்வு

nathan

தாய்மைக்கு தலை வணங்குவோம்

nathan

உடல் வலியை போக்கும் இந்த பூவை பற்றி உங்களுக்கு தெரியுமா ? அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…இரத்த அழுத்தத்தைக் கொண்டு, பிறக்கும் குழந்தை ஆணா, பெணா என்பதை அறியலாம் தெரியுமா?

nathan

வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்

nathan