26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
girlinner 16163
மருத்துவ குறிப்பு

உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கும் முன் இதை கவனியுங்கள் பெண்களே!

‘பொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் செலுத்தும் கவனத்தைப் பலரும், உள்ளாடைகள் வாங்குவதில் செலுத்துவதில்லை. உள்ளாடை எந்த அளவுக்கு தரமானதாகவும், கச்சிதமான அளவிலும் இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் நம் மேலாடையின் அழகும் வெளிப்படும். கடைகளுக்கு சென்று நமக்குப் பொருத்தமான உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் எந்தத் தயக்கமும் காட்டத் தேவையில்லை” என்கிறார் சென்னையில் உள்ள யூனிக் பொட்டீக்கின் உரிமையாளர் புனிதவதி. உள்ளாடை வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டியவை குறித்துகேட்டோம்.
girlinner 16163
சரியான அளவு அவசியம்!
பொதுவாக பெண்கள் பிராவை வாங்கும்போது சரியான அளவைக் கேட்டு வாங்குவதில்லை. மார்பக அளவைவிட சிறிய அல்லது அதைவிட பெரிய அளவுகளை வாங்கிவிடுவார்கள். மார்பகங்களுக்கு சற்று கீழ்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவுக்கு தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை. சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் பெரிய அளவிலான கப் சைஸ்கள் அணிவதாலோ அல்லது பெரிய மார்பகங்கள் உள்ள பெண்கள் சிறிய அளவிலான கப் சைஸ் கொண்ட பிராவை அணிவதாலோ எந்த வகையிலும் அவர்களின் தோற்றம் சிறப்பாக வெளிப்படாது. மாறாக உடல்ரீதியான தொந்தரவுகளே ஏற்படும்.

peri7 12039

நிறம் முக்கியம்!
உள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. பொதுவாக வெள்ளை மற்றும் சந்தன நிற உள்ளாடைகள் பார்க்க உறுத்தலாக இருக்காது.

ஆடைக்கேற்ற தேர்வு நல்லது!
பிரா அணியும்போது எந்த ஆடையை அணியப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டி-ஷர்ட் என ஆடை தேர்வுக்கு ஏற்ப பிரவையும் செலெக்ட் செய்யவது நல்லது.

டி- ஷர்ட் பிரா!
மெல்லிய டாப்ஸ் மற்றும் டி- ஷர்ட்களைப் பயன்படுத்தும் பெண்கள் இந்த வகை பிராவைப் பயன்படுத்தலாம். இது நார்மல் பிராக்களைப் போல இல்லாமல் மிருதுவாக இருக்கும். பிராவின் கொக்கி மற்றும் ஸ்ட்ராப் போன்றவை வெளியே தெரியாது. டி- ஷர்ட் அணிந்த பிறகு பார்ப்பதற்கு உறுத்தலான உணர்வைக் கொடுக்காது.

பேடட் பிரா!
ஒல்லியான பெண்களுக்கு எடுப்பான மார்பகங்களை கொடுப்பவை இந்த வகையான பிராக்கள். மார்பகம் சிறியதாய் உள்ளதே என, கவலை கொள்ளும் பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கலாம். மார்பக வடிவில் கிடைக்கும் இவற்றையும் சரியான அளவில் வாங்குவது நல்லது.

அண்டர் ஒயர் பிரா
பிரா கப்களுக்கு கீழ் மெல்லிய ஒயரைக் கொண்டிருந்தால் அது அண்டர் ஒயர் பிரா. தளர்ந்து போயிருக்கும் மார்பகங்களைத் தாங்கிப் பிடிக்க இவை பயன்படுகின்றன. எடை கூடுதலாக உள்ளவர்கள் இவற்றைப் பயன்படுத்தலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா!
விளையாடும் போது இந்த வகையான பிராக்களைப் பயன்படுத்தும்போது மிகவும் கச்சிதமாகவும், உறுத்தாமலும் இருக்கும். கவனம் திசை திரும்பாமல் ஆடை குறித்த கவலை இல்லாமல் தைரியமாக விளையாட இந்த வகை பிராக்கள் உதவுகின்றன. இவை பனியன் துணியால் உருவாக்கப்பட்டிருக்கும்.

சரியான அளவிலான பிராக்களை அணியாவிட்டால் தோள்பட்டையில் தழும்புகள் ஏற்படுவதுடன் பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே தரமான உள்ளாடையை அணியுங்கள். அவற்றை சுத்தமாக அணியுங்கள்!

ஆல் தி பெஸ்ட்!

Related posts

உங்களுக்கு தெரியுமா கலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் உடலில் இவ்வளவு அதிசயம் நிகழுமா?

nathan

சு கர் ஃப் ரீ மா த்திரைகளை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளே! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

இந்த ஒரு பொருள் ஆஸ்துமா பிரச்சனைக்கு குட்-பை சொல்ல வைக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் கொடுப்பதால் வரும் நன்மைகள் தெரியுமா ?

nathan

குழந்தையுடன் வெளிநாடு போறீங்களா..? – இதையெல்லாம் கவனிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் மறைந்துபோகுமாம்?

nathan

தலையில் அரிப்பா? குணப்படுத்த ஈஸி வழிகள்!!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்

nathan