24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
201701111048061145 buttermilk ladies finger kulambu Vendakkai Mor Kuzhambu SECVPF
சைவம்

பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. பேச்சிலருக்கான வெண்டைக்காய் மோர் குழம்பை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள் :

புளித்த தயிர் – 1 கப்
வெண்டைக்காய் – 10
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு…

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 1
தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை :

* வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* தயிரை நன்றாக கடைந்து வைத்து கொள்ளவும்.

* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, நன்கு வதங்கும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் தயிர் ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!!201701111048061145 buttermilk ladies finger kulambu Vendakkai Mor Kuzhambu SECVPF

Related posts

மேங்கோ கர்டு ரைஸ்

nathan

பேச்சுலர்களுக்கான.. சுலபமான.. வெஜிடேபிள் பிரியாணி

nathan

பனீர் 65

nathan

பிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா செய்ய…!

nathan

வாழைக்காய் கூட்டு

nathan

கொப்பரி பப்பு புளுசு

nathan

கடலைக் கறி

nathan

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

வெஜிடேபிள் கறி

nathan