26.6 C
Chennai
Friday, Jan 31, 2025
201701111526057519 Sugar Candy pongal kalkandu pongal SECVPF
சிற்றுண்டி வகைகள்

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்
தேவையான பொருட்கள் :

கல்கண்டு – 400 கிராம்
பச்சரிசி – 500 கிராம்
பால் – 1 லிட்டர்
முந்திரி – 10௦
திராட்சை – 10௦
நெய் – 200 கிராம்
ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை :

* கல்கண்டை பொடித்து கொள்ளவும்.

* பச்சரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

* பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவும்.

* இடையிடையே நெய்யை சேர்க்கவும்.

* பிறகு அதில் பொடித்த கல்கண்டை சேர்க்கவும்.

* கல்கண்டு கரைந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் ஊற்றி நன்கு கலந்து இறக்கி 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

* சூப்பரான கல்கண்டு பொங்கல் ரெடி.201701111526057519 Sugar Candy pongal kalkandu pongal SECVPF

Related posts

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan

கருணைக்கிழங்கு காரப் பணியாரம்!

nathan

சுக்கா பேல்

nathan

ரஸ்க் லட்டு

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

nathan

சில்லி கொத்து சப்பாத்தி

nathan

மாங்காய் இனிப்பு பச்சடி

nathan

வெங்காயத்தாள் பராத்தா

nathan

கொண்டைக்கடலை கட்லெட்

nathan