29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Untitled 1 copy
மருத்துவ குறிப்பு

பாரிசவாத நோயினை எவ்வாறு இனங்கான முடியும்?

பாரிசவாத நோயினை எவ்வாறு இனங்கான முடியும்?
சடுதியாக பாரிசவாதம் ஏற்படும் நோயாளியை பின்வரும் அறிகுறிகளை வைத்து இலகுவாக இனம்கண்டு கொள்ளலாம். இதனை இலகுவாக்குவதற்கு FAST எனும் குறியீடானது சர்வதேச ரீதியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் பெரும்பாலும் உடலின் ஒருபக்கத்தில் ஏற்படுகின்றன.

Untitled 1 copy

F – Face drooping (முகத்தின் சமச்சீரற்ற தன்மை) ஒருவரின் முகத்தில் சடுதியாக ஏற்படக்கூடிய சமச்சீரற்ற தன்மை இதனை அந்நபரை சிரிக்கவைப்பதன் மூலம் தெளிவாக கண்டறியமுடியும்.
A – Arm weakness (கையின் சோர்வுத்தன்மை) ஒருபக்க கையில் ஏற்படும் சோர்வுத்தன்மை நோயாளியின் இருகைகளையும் மேலே உயர்த்த செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
S-Speech Difficulty (தெளிவற்ற பேச்சு) நோயாளியின் பேச்சு தெளிவற்றுக் காணப்படும். அல்லது பேசுவதில் ஏற்படும் சிரமம்.
T-Time to Call-s உடனடி மருத்துவ உதவியை மேலே குறிப்பட்ட அறிகுறிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அறிகுறிகள் ஒருவரில் காணப்படுமாயின் நேர தாமதமின்றி வைத்திய சிகிச்சைக்கு எடுத்துச்செல்லுதல் வேண்டும்.

சடுதியாக ஏற்படும் பாரிசவாத நோயாளியை (Hypera Cutestroke) இனங்காணுமிடத்து உடனடியாக மருத்துவ உதவியை நாடுதல் அவசியமாகும். குறிப்பாக நோய் அறிகுறிகள் ஏற்பட்டு நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவச் சிகிச்சை வழங்கப்படின் நோயாளியின் குணங்குறிகள் முற்று முழுதாகக் குறைவடைவதற்கு வாய்ப்புண்டு.

மாறாக காலதாமதமாகும் பொழுது மூளைக்கு செல்லும் குருதியின் அளவு மேலும் குறைவடைந்து மூளைக் கலங்கள் இறக்கும் எண்ணிக்கையும் அதிகரித்துவிடும். அத்துடன் நோயாளியினுடைய குணங்குறிகளும் நிரந்தர மாகிவிடும். எனவே தகுந்தநேரத்தில் நோயாளியை இனங் கண்டுசிகிச்சையளித்தல் மிகஅவசியமாகும்.

பாரிசவாதத்திற்கு சிகிச்சையளிக்கமுடியுமா?

பாரிசவாதத்திற்குரிய சிகிச்சையானது நரம்பியல் நிபுணர் உள்ளடங்கிய விசேட பல்துறை வைத்திய நிபுணர் குழாமினால் வழங்கப்படுகிறது. இது சார்ந்த வசதிகள் மற்றும் பயிற்றப்பட்ட நிபுணர்கள் சேவைகள் என்பவை இலங்கையில் இப்பொழுது வடக்கு உட்பட அனைத்துப் பாகங்களிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பாரிசவாதம் இனங்காணப்பட்டு 4-5 மணி நேரத்துக்குள் நோயாளியை உரிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளிக்க இடமளிப்பதன் மூலம் இந்நோயின் வீரியத்தை முற்றாகவோ அல்லது இயலுமான வரை குறைத்துக்கொள்ளமுடியும்.பாரிசவாத நோயாளியின் நோய்க்கான காரணி குருதியடைப்பு என வல்லுநரால் இனங் காணப்படுமிடத்து குருதிக்கட்டிகளாக கரைக்கும் ஊசி மருந்துகளை (rtPA) ஏற்றி அடைப்பினை நீக்கமுடியும்.

பாரிசவாதத்தின் விளைவுகள் என்ன?

பாரிசவாதத்தினால் ஏற்படும்பாதிப்பு என்பது இந்நோயால் ஒருவரின் மூளையின் எந்தப்பகுதி பாதிப்பிற்குள்ளாகி யுள்ளது என்பதில் தங்கியுள்ளது. மூளையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏற்படும் சிறிய செயலிழப்பு கூட பாரிய விளைவுகளை உருவாக்கலாம்.

அதேவேளை மூளையானது பெரியளவில் பாதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்புக்களை அவதானிக்க முடியாமலும் இருக்கலாம்.மிகவும் பொதுவான பாதிப்புக்களாவன.

  • உடலில் ஒருபக்கம் செயலற்றுப்போதல் (Hemiplegia)
  • உடலின் ஒருபக்கம் உணவர்வற்றுக் காணப்படுதல் (Loss of Sensation)
  • பார்வையிழப்பு (LOSS of Vision)
  • தொடர்பாடலில் சிரமம் (Communication Disor der/aphasia)
  • விழுங்குவதில் சிரமம் (Dysphagia) அறிவுசார் செயற்பாடுகள்,சிந்திக்கும் திறன் இழக்கப்படல் (Cognitive Impairment)
  • அதிகமாக உணர்ச்சிவசப்படல் (Emotional instability)

பாரிசவாத நோய்க்குள்ளானவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை யாவை?

  • இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தல்
  • கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவினைக் கட்டுப்படுத்தல்
  • முறையான உடற்பயிற்சி உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலம் உடற்பருமனைக் கட்டுப்படுத்தல்
  • புகைத்தல் பழக்கத்தை முற்றாக நிறுத்துதல்
  • மதுபாவனையை குறைத்தல்

பாரிசவாதம் ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் பாரிச வாதம் ஏற்படுமா?

ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்பட்டால் ஒரு வருட காலப் பகுதிக்குள் மீண்டும் பாரிசவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள்அதிகம், ஒருவருடகாலத்தின்பின்னர் மீண்டும் இன்னொரு பாரிசவாதம் ஏற்படுதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் இக்காலப்பகுதியினுள் பாரிசவாதம் ஏற்படு வதற்குரிய மேற்குறிப்பிட்ட காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக பாரிசவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தினை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

222


பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் இயல்பு வாழ்க்கையை அடைய முடியுமா?

மூளையின் சிலபகுதிகள் பாரிசவாதத்தினால் பாதிக்கப்படுமிடத்து அந்தப்பகுதிகளுடன் தொடர்புடைய தொழிற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஆனால் சீரான நரம்பியல் பயிற்சியை மேற்கொண்டு நோயாளியை அவரது இயல்பு வாழ்க்கைக்கு எடுத்துச்செல்ல முற்படும் பொழுது பாதிக்கப்பட்ட பகுதியுடன் தொடர்புடைய மூளையின் செயற்பாடுகள் பாதிக்கப்படாத மூளையின் வெவ்வேறு பாகங்களுக்கு இயல் பாகவே மாற்றப்படுவதனால் நோயாளி நல்ல நிலையை அடைய வாய்ப்புக்கள் உள்ளன.

ஆகவே பாரிசவாதம் ஏற்பட்டால் ஒருவரால் மீண்டும் முன்னர் போல இயல்புநிலைக்கு மீள முடியாது என்ற கருத்து தவறானதாகும். நோயாளியை வைத்தியரால் சிபாரிசு செய்யப்பட்ட மூளைப் பயிற்சிகளை தவறாது தகுந்த முறை யில் மேற்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் அவரை தன்னிச்சையாக இயங்க இடமளிக்கலாம்.

இது பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளன பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டமூளையின் பகுதி பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டமூளையின் அளவு, பாரிசவாதம் ஏற்பட்டதல் இருந்து மருத்துவச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட காலம், பாரிசவாதம் தவிர்ந்த ஏனைய நோய் நிலைகள் (நீரிழிவு, உயர் குருதிய முக்கம் மற்றும் கொலஸ்ரோல் வியாதிகள்), பாரிசவாதத்தின் தன்மை (குருதிப்பெருக்கு, குருதியுறைவு) எனவே பாரிசவாதம் பற்றிய அடிப்படைத் தகவல்களை தெரிந்துகொள்வதன் மூலமும் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் பாரிசவாத நோயாளிகளைத் தக்க தருணத்தில் தகுந்த வைத்தியரிடம் சிகிச்சைக்கு எடுத்துச்சென்று இந்நோயினால் ஏற்படக்கூடிய பாரதூர மான விளைவுகளைக் குறைத்துக்கொள்ளமுடியும்.

Related posts

ஆலிவ் எண்ணெயின் இரட்டை நன்மைகள்!! அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும்…

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்கள் உடலில் அதிகம் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டுமா?

nathan

ஒரு கேள்வி உங்கள் வாழ்க்கையை மாற்றும்

nathan

ஆண்களுடன் பெண்கள் மனம் விட்டு பேசலாமா

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால்… அலட்சியம் காட்ட வேண்டாம்..!

nathan

கரையான் அரிக்கும் மரபொருட்கள்: மாற்றுவழி என்ன?

nathan

தீக்காயங்களுக்கு……!

nathan

பெண்கள் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படும் பெண்களுக்கு சிகிச்சை

nathan