28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
hXGd9sW
சிற்றுண்டி வகைகள்

கான்ட்வி

என்னென்ன தேவை?

கடலை மாவு – 100 கிராம்,
புளித்த தயிர் – 3/4 கப் மற்றும் 2 1/4 கப் தண்ணீர் அல்லது புளித்த மோர் – ¾ கப்,
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம் – சிறிது.

ஃபில்லிங் செய்ய…

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்.

அலங்கரிக்க…

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – 8-10,
கடுகு – 1 டீஸ்பூன்,
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1 அல்லது மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தயிர் அல்லது மோர் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது , மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்க்கவும். இத்துடன் கடலைமாவு சேர்த்து நன்கு மிருதுவான மாவாக மாற்றவும். ஒரு ட்ரேயில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். விடாமல் கட்டியில்லாமலும் அடிப்பிடிக்காமலும் கிளறவும்.

சிறிதளவு மாவை ட்ரேயில் வைத்து ஆறியவுடன் ரோல் செய்யவும். செய்ய முடியாவிட்டால் மாவு சரியான பதத்துக்கு வரவில்லை என்று அர்த்தம். பிறகு மாவை பாத்திரத்தில் கொட்டி நன்கு கரண்டியால் பரப்பி விடவும். 1:3 என்ற விகிதத்தில் கடலைமாவு மற்றும் மோரை எடுத்து கலந்து மிதமான கலவையாக ஆக்கவும். வேண்டுமானால் இஞ்சி, பச்சைமிளகாய் பேஸ்ட் சேர்க்கலாம். இதன்மேல் தேங்காய்த்துருவல், கொத்தமல்லி தழை போட்டு ரோல் செய்யவும். சரியான அளவு துண்டுகளாக வெட்டவும்.

அலங்கரிக்க…

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், எள் போட்டு வறுத்து கான்ட்வி ரோல் மேல் தூவி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறலாம்.hXGd9sW

Related posts

பசியைத் தூண்டும் சீரக துவையல்

nathan

சப்பாத்தி – தால்

nathan

இறால் கட்லெட்

nathan

சத்தான சுவையான கோதுமை உசிலி

nathan

சுவையான மீன் புட்டு செய்வது எப்படி

nathan

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

nathan

பலாப்பழ தோசை

nathan

சத்தான கார்ன் ரவை கிச்சடி

nathan

மும்பை ஸ்டைல் பேல் பூரி

nathan