சருமத்தை நிறமாகுவது என்பது இங்கு நிறத்தை மொத்தமாக மாற்றுவது என்பதில்லை. சருமத்தில் வெயிலால் ஏற்படும் கருமை, கரும்புள்ளி, மங்கு போன்றவை நமக்கு தெரியாமலே ஒரு பொலிவற்ற நிறத்தை கொடுத்திருக்கும். அதனை எப்படி மாற்றி உங்கள் சருமத்தை மெருகூட்டலாம் என்பதேயாகும்.
இங்கே சொல்லப்பட்டிருக்கும் அழகுக் குறிப்புகள் உங்கள் சருமத்திற்கு எந்த பாதகமும் அளிக்காது. ரசாயனம் கலந்த க்ரீமிகளால் உண்டான பாதிப்புகளை சரி செய்து சருமத்தை மெருகூட்டும். கூடுதல் அழகினை தரும். சுருக்கங்கள், வறட்சி, அதிகப்படியான எண்ணெய் ஆகிய்வற்றை போகி, உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும் என்பது உண்மை. எப்படி என பார்க்கலாம்.
ரெசிபி -1
தேவையானவை :
யோகார்ட் – 1 டீ ஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
பாதாம் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை டீ ஸ்பூன்
பாதாமை பொடித்து அதனுடன் தேன் யோகார்ட் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். வாரம் 1 முறை செய்து பாருங்கள். மாற்றத்தை காண்பீர்கள்.
ரெசிபி -2
தேவையானவை :
கோகோபட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 10 துளிகள்
ரோஸ்மெரி எண்ணெய் – 5 துளிகள்
மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து கொள்ளுங்கள். முகத்தை கழுவியபின் இந்த கலவையை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பின் அரை மணி நேரம் கழித்து கழுவவும்
ரெசிபி -3
தேவையானவை :
பாதாம் எண்ணெய் – 10 துளிகள்
தேயிலை மர எண்ணெய் – 10 துளிகள்
தேங்காய் எண்ணெய் – 5 துளிகள்
எல்லாவற்றையும் கலந்து இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவவும். மறு நாள் காலையில் முகத்தை கழுவுங்கள். விரைவில் பலன் தெரியும்.
ரெசிபி -4
தேவையானவை :
சோற்றுக் கற்றாழை – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
சோற்றுக் கற்றாழையின் சதையுடன் தேன் கலந்து முகம் கழுத்துப் பகுதியில் தடவவும். இது முகத்தில் மென்மையாக்கும். இளமையாக்கும். நிறத்தை தரும். இதனை வாரம் மூன்று நாட்கள் உபயோகியுங்கள்.
ரெசிபி -5
தேவையானவை :
வெள்ளரிச் சாறு – 1 டீ ஸ்பூன்
உருளை சாறு – 1 டீ ஸ்பூன்
தேன் – 1 டீ ஸ்பூன்
எல்லாவற்றையும் கலந்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவவும். விரைவில் பலன் கிடைக்க தினமும் உபயோகிக்கலாம்.