28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

வெள்ளை முடியால் உங்களுக்கு கவலையா?

Description:

damaged-hair-main-620km110912-1363292852

வெள்ளை முடி ஒன்னு வந்தலே தாங்க வயசாயிட்டம் தங்களை யாரும் கண்டுக்க மாட்டங்கள், வேலைகளை செய்வது கடினம் இப்படி எல்லாம் ரொம்பவே சிலர் அலட்டி கொள்வது சகஜம் தான். வெள்ளை முடி அகற்ற சில குறிப்புக்கள்.
மேலை நாட்டு கலாச்சாரம் ஊடுருவி வரும் இந்த காலகட்டத்தில் நம்மை அழகுபடுத்திக் கொள்ள ஏராளமான நவீன அழகு சாதன பொருட்கள் வந்துள்ளன.

ஆனாலும், அவை அனைத்தும் செயற்கையான அழகை மட்டுமே தரும். இதை இந்த காலத்து இளசுகள் உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.
இதற்கு சான்று… மீண்டும் நமது பாட்டி காலத்து மூலிகை அழகு பொருட்களை உபயோகப்படுத்த தொடங்கியிருப்பதுதான். இதற்காக மூலிகைகளை பயன்படுத்தி அழகுபடுத்தும் நிலையங்களுக்கு சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார் மேற்கு மாம்பலம் ஆர்யகவுடா சாலை சந்திப்பில் உள்ள ‘குமரகிரி’ நிறுவனத்தின் பொறுப்பாளர் நித்யஸ்ரீ.

குமரகிரியின் உள்அலங்காரமே அமேசான் காடு போல முழுக்க முழுக்க செடி, கொடிகள், மரங்கள் என அசத்தியிருந்தார்கள். அங்கு நித்யஸ்ரீயை சந்தித்த போது அவர் கூறியதாவது… மாடர்ன் என்ற மாயவலையில் சிக்கியிருக்கும் இப்போதைய இளசுகள், தங்களை அழகுபடுத்திக் கொள்ள கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, முடியை அழகுபடுத்திக் கொள்ள கலரிங், ஸ்டெய்ட்னிங் செய்து கொள்கிறார்கள். ஹேர் ஸ்பிரே பயன்படுத்துகிறார்கள்.

இவைகளால் செயற்கையான அழகு, நறுமணம் கிடைத்தாலும் விரைவிலேயே பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏற்கனவே வேலை டென்ஷன், கெமிக்கல் கலந்த சாப்பாடு, ஃபாஸ்ட் புட், சுகாதாரமற்ற தண்ணீர் போன்ற காரணங்களால் நமது உடலும், முடியும் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இளம் வயதினருக்கு கூட முடி வெள்ளையாகி விடுகிறது. இளநரையை மறைக்க முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்.

டை அடிக்கிறார்கள். இதனால் வெள்ளை முடி பரவத்தொடங்குகிறதே தவிர இதற்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் தவிக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக சிறப்பு மூலிகைகள் உள்ளன. மூலிகைகள் மூலம் 3 மாதத்தில் வெள்ளை முடியை இயற்கையான கறுமை நிறத்துக்கு கொண்டு வர முடியும். பொதுவாக எல்லா பெண்களுக்குமே முடி உதிர்தலும், தீராத பருக்களும் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இதற்கும் மூலிகை பேஸ்ட், ஆயில் உள்ளது.

அதோடு, பொடுகு அகற்றுதல், முடி வெடிப்பு, தலைவலி, பேன் அகற்றுதல், முகத்தை வெண்மையாக்குதல், கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை அகற்றுதல், முகத்தில் எண்ணெய் வடிதலை தடுத்தல், உடல் உஷ்ணத்தை குறைத்தல், தூக்கமின்மைக்கு தீர்வு, கால் வெடிப்பு, பித்த வெடிப்பு, மூட்டு வலி, ஷூ போடுவதால் ஏற்படும் கால்வலி போன்ற அனைத்து பிரச்னைகளுக்குமே மூலிகை பொருட்கள் இருக்கிறது.

சாப்ட்வேர், பிபீஓ துறைகளில் இருப்பவர்களுக்கு உணவு சாப்பிடும் நேரம் மாற்றம், டென்ஷன், தூக்கமின்மை போன்ற காரணங்களால் உடல் உஷ்ணமாகி தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் உடல் உஷ்ணத்தை போக்க மூலிகை ஆயில் மசாஜ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மசாஜ் செய்து கொண்டால், உஷ்ணத்தை போக்கி பிரஷ்ஷாகலாம்.

செயற்கை அழகு என்பது மாயை. இயற்கையான அழகுதான் உண்மையான அழகு. அதை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், முழுக்க முழுக்க வேர், கிழங்கு, வேர்ப்பட்டை, பச்சை இலைகள், பூக்கள், காய், கனி மற்றும் மூலிகை செடிகளால் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்துகிறோம். கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள 2 பாட்டிகள் அந்த காலத்து ஸ்டைலில் மூலிகைகளை கையால் அரைத்து அழகு பொருட்களையும் ஆயிலையும் தயாரிக்கிறார்கள்.

2 ரூபாய் வாழைப்பழம், வெள்ளரிக்காயில் கூட நம்மை அழகாக்கி கொள்ள முடியும். அதனால், குறைவான விலை கொண்ட மூலிகை பொருட்களும் தரமானவைதான். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

உங்களுக்கு தலை முழுதும் பொடுகா? இதோ விரைவில் போக்கும் இயற்கை வைத்தியங்கள்!!

nathan

உடனே செய்யுங்க ! ஹேர் மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.

nathan

கிச்சனில் இருக்கும் இந்த பொருட்கள் உங்க முடியை நீளமாகவும் பளபளப்பாகவும் மாற்றுமாம் ?

nathan

பேன்களை போக்கும் வீட்டு சிகிச்சை

nathan

எப்படி பயன்படுத்துவது.?! பொடுகைப் போக்கும் எலுமிச்சை..!

nathan

உங்க கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் ​பொருந்தும்?

nathan

கூந்தலை எப்படி வார வேண்டும்?

nathan

இளநரைக்கு எளிய வீட்டு வைத்தியம்

nathan

உங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா?

nathan