28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
மருத்துவ குறிப்பு

உங்கள் கோபம் குறைய வேண்டுமா? தயங்காமல் வெட்டுங்கள்!

எல்லைகள் மீறப்படாதவரை எதுவுமே ஆபத்தில்லை. மனித வாழ்க்கைக்கு அவசியப்படுகிற இந்த எல்லைக்கோடு செடி, கொடி, தாவர இனத்துக்கும் தேவைப்படுகிறது. விளிம்புகள்… இவற்றை தோட்டத்தின் எல்லைக்கோடுகள் என்று சொல்லலாம். தோட்டத்தின் கூறுகள் மூலம்தான் தோட்ட வடிவமைப்பில் எதிர் மேலாண்மை செய்ய முடியும். எதிர் மேலாண்மையை எந்த அளவுக்கு கிரகித்துச் செய்கிறோமோ அந்தளவு தோட்டம் அழகாகத் தெரியும். தோட்டத்தின் கூறுகள் வரிசையில் மரங்களையும், அடுத்து பனை வகை சார்ந்த செடிகள் மற்றும் புதர்ச் செடிகளையும் எங்கெல்லாம் வைப்பது அழகு என்று பார்த்தோம். அந்த வகையில் மூன்றாவதாக விளிம்புகள் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

ஒரு தோட்டத்தின் இரண்டு கூறுகளை வேறுபடுத்திக் காட்ட இந்த விளிம்புகள் பயன்படும். அதாவது, ஒரு எல்லை அமைப்பதற்காக இந்த விளிம்புகளை நாம் அமைக்கிறோம். இதை ஆங்கிலத்தில் Hedges and Edges என்கிறோம். இவை இரண்டும் ஒன்றுதான். இரண்டின் பயன்களும் ஒன்றுதான். இரண்டுக்குமான செடிகளின் தேர்வில்தான் இவை வேறுபடும். எட்ஜஸை எங்கே வைப்பது, ஹெட்ஜஸை எங்கே வைப்பது என்கிற தெளிவு வேண்டும்.

எட்ஜஸ்

எட்ஜஸ் என்பவை ஒரு அடி அளவிற்கு உயரம் குறைத்து புதர் செடிகளாக அடுத்து அடுத்து நட்டு பராமரிக்கக் கூடியவை. 2 அடி, 3 அடி, 4 அடிகளுக்கு எல்லை ஓரம் வைக்கக்கூடிய செடிகளை ஹெட்ஜஸ் என்று சொல்கிறோம். ஒரு சின்ன உதாரணத்துடன் சொன்னால் புரியும். ஒரு பூங்காவினுள் செல்கிறீர்கள். அங்கே இரு பக்கங்களிலும் புல்தரை இருந்தால் அது உங்கள் பார்வைக்குத் தெரிய வேண்டும். தரையோடு இருக்கக்கூடிய ஒருவகையான தோட்டக்கூறுதான் புல்வெளி. இதற்கு ஒரு விளிம்பு கட்ட வேண்டும். இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரைதான் புல்தரை… அடுத்துள்ள இடம் வேறு என்பதைக் காட்ட புல்தரையைச் சுற்றிலும் விளிம்பு கட்ட வேண்டும். அந்த விளிம்பை எப்படிக் கட்டலாம்?

தாவரங்களை வைத்தும் விளிம்புகள் அமைக்கலாம். தாவரங்கள் அல்லாத பொருட்களை வைத்தும் விளிம்புகள் அமைக்கலாம். தாவரங்களில் டுராண்ட்டா என்றொரு செடி இருக்கிறது. கோல்டன் டுராண்ட்டா என்றும் அழைக்கப்படுகிறது. மஞ்சள் மற்றும் பச்சை தளிர்களைக் கொண்ட செடி அது. புதர் மாதிரி வளரக்கூடிய அதை புல்தரையைச் சுற்றிலும் நட்டுவிடலாம். பிறகு அதை வெட்டி சீர் செய்ய முடியும். அது எத்தனை உயரத்துக்கும் வளரும். அதை நாம் வேண்டிய உயரத்துக்கு வைத்திருந்தால் எங்கிருந்து பார்த்தாலும் புல்தரை கண்களுக்குத் தெரியும். விளிம்புகளினால் புல்தரை மறையாது. அதே நேரம் இந்தப்புல் தரைக்கு இதுதான் எல்லை எனக் காட்டக் கூடியதாக அமையும்.

யுஃபோர்பியா மில்லி என்றொரு முள் வகையை சார்ந்த செடியையும் பயன்படுத்தலாம். அதை கிறிஸ்துவின் முள் என்றும் கூறுவர். இதைக்கூட புல்தரையைச் சுற்றிலும் வைக்கலாம். இது ஒருவகையான கரடுமுரடான தோற்றத்தைக் கொடுக்கும். முட்கள் உள்ளதால் குழந்தைகள் விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகள் அதிகம் விளையாடும் இடங்களில் கோல்டன் டுராண்ட்டா வைக்கலாம். ‘மற்றபடி உள்ளே போய் பார்க்க வேண்டாம்… வெளியில் இருந்து ரசித்தால் போதும்’ என்கிற பட்சத்தில், அதாவது, அந்தப் புல்தரை உபயோகப்படவில்லை… வெறும் அழகுக்காக மட்டும்தான் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் முள்செடிகளை வைக்கலாம்.

பெரிய ஐடி கம்பெனிகள் போன்ற இடங்களில் பராமரிப்பு குறைவாக வேண்டும்… அதற்கேற்ற மாதிரியான விளிம்பு அமைப்புகள் வேண்டும் என சிலர் நினைப்பார்கள். புல்தரையைப் பராமரிப்பதே சிரமம் என்கிற போது, இந்த விளிம்புகளையும் சேர்த்துப் பராமரிக்க வேண்டுமா எனக் கேட்கிறவர்கள், செங்கலோ, ஓடோ சரிவாக வைத்து எல்லை மாதிரி அமைத்துக் கொடுக்கலாம். அப்படியில்லாவிட்டால் புல் தரை முடிந்ததும் ஒரு அடிக்கு கூழாங்கற்களைப் பரப்பி விடலாம். இதுவும் புல்தரையை மற்ற கூறுகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும். தரைத்தளத்தில் செய்யக்கூடிய தோட்டத்தின் கூறுகளான புல்வெளி, தரையோடு தரையாக இருக்கக்கூடிய செடிகள், தரை மட்டத்துக்கு இருக்கக்கூடிய பச்சையம் சார்ந்த செடிகள் வைக்கும் இடங்களில் எல்லையாக எட்ஜஸை வைக்கலாம்.

ஹெட்ஜஸ்

எட்ஜஸ் என்பவை வெறும் எல்லை அமைப்புக்கானவை, அவ்வளவுதான். அவற்றால் பாதுகாப்பெல்லாம் இருக்காது. `இது எங்க ஏரியா’ என எடுத்துக் காட்டுவதே எட்ஜஸின் வேலை. ஹெட்ஜஸிலோ இதே டுராண்ட்டா மற்றும் புதர்ச்செடிகளான Murraya exotica, கறிவேப்பிலை வகையைச் சேர்ந்த செடி வகை மற்றும் அகாலிஃபா, மூங்கில் போன்ற செடிகள் புதர்ச் செடிகளாகவும் வளரும். 2 அடிக்கு ஒரு செடி என்கிற அளவில் Zigzag planting சொல்லக்கூடிய அமைப்பில் நட்டுவிடலாம். அது ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு வளரும். அப்போது அதை ஒரு காம்பவுண்ட் சுவர் மாதிரியே அதைப் பராமரிக்கலாம். அந்த அளவுக்கு அடர்த்தி கொடுக்கக்கூடியவை இவை. ஒரு குறிப்பிட்ட ஏரியாவினுள் உள்ளே நீர்வீழ்ச்சி மாதிரி அமைத்திருக்கிறீர்கள்… அதை உள்ளே சென்று உட்கார்ந்து ரசிக்க வேண்டும் என்கிற நிலையில் அந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் மாதிரி அடர்த்தியாக இந்தச் செடிகளை வளர்க்கலாம்.

நமது தோட்டத்துக்கே எல்லையாக, அதாவது, தோட்டத்தைச் சுற்றிலும் ஒரு பச்சைய அமைப்பைக் கொடுக்கவும் இந்த ஹெட்ஜஸை கொடுக்கலாம்.
அடுத்தது நடைபாதை. அதன் இரு பக்கங்களையும் வரைப்படுத்தவும் இந்த ஹெட்ஜஸ் பயன்படும். இவற்றில் முள் உள்ளவை, முள் அல்லாதவை என எதை வேண்டுமானாலும் வைக்கலாம். இவற்றை 1 அடி முதல் 5 அடி வரை வைத்துப் பராமரிக்க முடியும். இந்த ஹெட்ஜஸை அவரவர் விருப்பப்படி ஷார்ட் ஹெட்ஜ், மீடியம் ஹெட்ஜ் மற்றும் டால் ஹெட்ஜ் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இன்னொன்று பாதுகாப்பு விளிம்புகள் (Protective Hedges) கொடுக்காப்புளி மரத்தைக்கூட ஒரு புதர்ச்செடி போல வரிசையாக வளர்த்துக் கூட ஹெட்ஜஸாக அமைக்கலாம்.

சவுக்கு மரங்களை ஒரு அளவு வரை வளர்த்து வெட்டி விட்டுக் கொண்டே இருந்தால் அதுவும் ஒரு ஹெட்ஜாக மாறும். பொகேன்வில்லாவையும் வைத்துச் செய்யலாம். ஒரு தோட்டம் என்பது ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஒரு பூங்காவினுள் நடக்கிறீர்கள்… அங்கே நீங்கள் பார்க்கிற காட்சிகள் ‘அட
இவ்வளவுதானா’ என நினைக்க வைக்கிற அளவுக்கு ஒரு சலிப்பைத் தரக்கூடாது. அடுத்து என்ன இருக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் தேடலையும் கொடுக்க ஹெட்ஜஸ் பயன்படும். இவை ஒரு திரை மாதிரி அடுத்து நீங்கள் பார்க்கப் போகிற பகுதியை இவை மறைத்துக் கொண்டிருக்கும். அந்த ஏரியாவுக்குள் நுழைந்தால்தான் அங்கே உள்ள விஷயங்கள் உங்களுக்குத் தெரிய வரும். இப்படி தோட்டத்தின் நுழைவு முதல் முடிவு வரை ஒரு எதிர்பார்ப்பையும்
ஆச்சரியத்தையும் தக்க வைத்து சுவாரஸ்யம் தரக்கூடியவை ஹெட்ஜஸ்.

விவசாய நிலங்களுக்கு வேலி என்பது எப்படியோ அதே அடிப்படையில்தான் தோட்டங்களுக்கு ஹெட்ஜஸ் என்பவையும் பயன்படுகின்றன. விவசாய நிலங்களுக்கு இரும்பு வேலியோ, கள்ளி வேலியோ அமைப்பார்கள். அதே கள்ளியைக் கொண்டுகூட நாம் தோட்டங்களில் ஒவ்வொரு கூறையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் வகையில் ஹெட்ஜஸ் அமைக்கலாம். சென்னையில் உள்ள பலவகை பூங்காக்களிலும் இந்த ஹெட்ஜஸ் அமைப்புகளை நீங்கள் பார்க்கலாம். செம்
மொழிப் பூங்கா, தியசாபிகல் சொசைட்டி, அடையாறு பூங்கா, கோட்டூர்புரம் பூங்கா, மாநகராட்சிப் பூங்காக்கள் என எல்லாவற்றிலும் எட்ஜஸ் அண்ட் ஹெட்ஜஸ் என்பவை முக்கியமான தோட்டக்கூறுகளாக இருப்பதைக் கவனிக்கலாம். அதே அமைப்பை வீட்டுத்தோட்டத்துக்குள்ளும் கொண்டு வர முடியும்.

உதாரணத்துக்கு உங்கள் வீட்டின் கார் போய் வர ஒரு பாதை இருக்குமில்லையா? அந்தப் பாதையின் இரு பக்கங்களிலும் ஹெட்ஜஸ் வைக்கலாம். உங்கள் வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடையில் காம்பவுண்ட் சுவர் இருக்கும். அதையும் பசுமையாகக் காட்ட நினைத்தால் காம்பவுண்ட் சுவர் உயரத்துக்கே இந்த ஹெட்ஜஸை வளர்க்கலாம். அடுத்த வீட்டுக்குள் இலை விழுகிறது, பூ விழுகிறது என்கிற பிரச்னைகளும் இல்லாமல் காம்பவுண்ட் சுவர் தடுக்கும். வீட்டுக்கு உள்ளிருந்து பார்க்கும்போது அந்த ஹெட்ஜஸ் தரும் பசுமைத் தோற்றம் ஒருவித மன அமைதியைக் கொடுக்கும்.

வெறும் செங்கலும் சிமென்ட்டுமாக அல்லாமல் இயற்கை சூழலில் இருக்கும் உணர்வைக் கொடுக்கும். காம்பவுண்ட் சுவருக்கு வெளிப்பக்கம், ஆடு, மாடுகள் தின்னாத செடிகளை விளிம்புகளாக வைத்தால் வெளியில் இருந்து பார்க்க உங்கள் வீடு இயற்கைச் சூழலில் அமைந்தாற்போலவே தெரியும். இந்தச் செடிகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். எட்ஜஸாக துளசி, கற்பூரவல்லிச் செடிகளையும், ஹெட்ஜஸாக நச்சுக் கொட்டைக் கீரைச் செடிகளையும் வைக்கலாம். இந்தச் செடிகள் மருந்தாகவும் உணவாகவும் நமக்குப் பயன்படும். கடைசியாக ஒரு செய்தி… மனிதர்கள் எல்லோருக்கும் கோபம் வருவது இயல்பு. அப்படி கோபம் தலைக்கேறும் போது இந்தச் செடிகளை வெட்டி சமன்படுத்திவிட்டு வந்தால் தானாக உங்கள் கோபம் வடிந்துவிடும். மனம் அமைதியாகும். உங்கள் கோபத்தையும் தாங்கக்கூடிய இந்த எட்ஜஸ் மற்றும் ஹெட்ஜஸை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கொண்டு வாருங்கள்!wRWHAp6

Related posts

‎நெஞ்சுவலி‬ ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை – See more at: …

nathan

உங்களுக்கு தெரியுமா வாயுத்தொல்லையை குணமாக்க உதவும் அற்புத குறிப்புகள்..

nathan

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?

nathan

எக்காரணம் கொண்டும் மருத்துவரை பார்க்கமாட்டேன் என்பதற்கு மக்கள் வைத்திருக்கும் மடத்தனமான காரணங்கள்!

nathan

பகலில் தூங்குவது நல்லதா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மருத்துவர்கள் எப்போது சிசேரியன் செய்ய வேண்டுமென கூறுவார்கள் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ் சிறுநீரகக் கற்கள் விரைவில் கரைய தேனில் ஊற வைத்த இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிடுங்க பலன் நிச்சயம்!!

nathan

இந்தியர்கள் துளசி செடியை சுற்றி வருவதற்கான அறிவியல் காரணங்கள் என்னவென்று தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பிறகு தழும்புகள் உண்டாகமல் இருக்க இத சாப்பிடுங்க..!

nathan