23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
AWmcdtMG2 1
சிற்றுண்டி வகைகள்

ஜவ்வரிசி தோசை

தேவையானவை: ஜவ்வரிசி, பச்சரிசி, இட்லி அரிசி – தலா ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, பச்சைப் பட்டாணி – கால் கப், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்).

செய்முறை: ஜவ்வரிசி, பச்சரிசி, இட்லி அரிசியை ஒன்றாக சேர்த்து, 3 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும். மாவை 5 மணி நேரம் புளிக்கவைக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி, மாவுடன் கலந்து, பச்சைப் பட்டாணி சேர்க்கவும். (விருப்பப்பட்டால்) நல்லெண்ணெயை மாவுடன் கலந்துவிடவும். மாவை தவாவில் அரை அங்குல கனத்துக்கு தோசையாக ஊற்றி, அடுப்பை `சிம்’மில் வைத்து தோசையை மூடி வைக்கவும் (திருப்ப வேண்டாம்). வெந்ததும், எடுத்துப் பரிமாறவும்.

உளுந்து சேர்க்காத வித்தியாசமான தோசை இது. எள்ளை வறுத்து, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அரைத்த சட்னியை இதற்குத் தொட்டுக்கொள்ளலாம்.AWmcdtMG2

Related posts

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா

nathan

முட்டைகோஸ் செட் ரொட்டி

nathan

சோயா தட்டை

nathan

மு‌ட்டை க‌ட்லெ‌ட்

nathan

குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்

nathan

மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி…?

nathan

தேங்காய்-ரவா புட்டு

nathan

தஹி பப்டி சாட்

nathan