23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
wulMW78
சிற்றுண்டி வகைகள்

கொய்யா இனிப்பு வடை

கொய்யா இனிப்பு வடை
தேவையானவை: பெரிய கொய்யாப் பழம் – 2, உளுந்து, சோயாபீன்ஸ் – தலா அரை கப், கெட்டிப்பால் – தேவையான அளவு, பொடித்த சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், பொடித்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரை (சிரப் தயாரிக்க) – இரண்டரை கப், எண்ணெய் – 300 கிராம்.
செய்முறை: உளுந்து, சோயா பீன்ஸ் இரண்டையும் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, பால் சேர்த்து வேகவிட்டு எடுத்து, கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும். கொய்யாப்பழத்தின் தோல், விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும். அரைத்து வைத்த மாவுடன் பொடித்த சர்க்கரை, முந்திரி, ஏலக்காய்த்தூள், மசித்த கொய்யாப்பழம் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு, நிதானமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.
சர்க்கரையில் நீர் விட்டுக் கொதிக்க வைத்து கெட்டி `சிரப்’பாகக் காய்ச்சி இறக்கவும். வடைகளை ஒரு பெரிய தட்டில் வரிசைப்படுத்தி, ஒவ்வொரு வடையின் மீதும் சமமாக `சிரப்’ விடவும். விருப்பப்பட்டால், கொப்பரைத் துருவல் தூவி அலங்கரிக்கலாம்.wulMW78

Related posts

உருளைக்கிழங்கு சமோசா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

nathan

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி

nathan

காலிஃப்ளவர் பக்கோடா

nathan

சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை

nathan

ஹமூஸ்

nathan

இஞ்சி துவையல்!

nathan

றுதானிய கார குழிப்பணியாரம்…

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan