1468396906 6537
சைவம்

வெண்டை மொச்சை மண்டி

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – அரை கிலோ
தக்காளி – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 3
காய்ந்த மிளகாய் – 3 (அல்லது காய்ந்தது)
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 3 பல்
மொச்சைப் பயறு – 50 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயை கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். மொச்சைப் பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் போட்டு வேகவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும்.

புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். வெண்டைக்காய் பாதியளவு வெந்ததும் மொச்சைப் பயறைச் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

சுவை மிகுந்த வெண்டை மொச்சை மண்டி தயார்.1468396906 6537

Related posts

தயிர் சாதம் பிராமண சமையல்

nathan

இதயத்துக்கு இதமான கொத்தவரங்காய் சப்ஜி

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

புதினா பிரியாணி

nathan

பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan

ஆலு பலாக் ரைஸ்

nathan

ஐந்து இலை குழம்பு அடடா, என்ன ருசி!

nathan

சுலபமான.. வெஜிடேபிள் பிரியாணி

nathan

கம்பு தயிர்சாதம் செய்வது எப்படி

nathan