25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
ht444815
கர்ப்பிணி பெண்களுக்கு

ஆர்வத்தால் வரும் ஆபத்து!

”குழந்தை எப்படி வளர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தால் சிலர் அடிக்கடி ஸ்கேன் எடுக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் இதுபோல் CT ஸ்கேன் மற்றும் X-ray எடுப்பதால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கர்ப்ப காலத்தில் 5 நிலைகளில் மட்டும் ஸ்கேன் எடுத்தால் போதுமானது” என்கிறார் மகப்பேறு மருத்துவர் கனிமொழி.”CT ஸ்கேன் எடுக்கையில் அயோடின் மூலக்கூறுகள் Contrast Agent ஆகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தை யின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதேபோல் எக்ஸ் கதிர்களின் கதிர்வீச்சும் குழந்தையின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

தேவைப்படும் பட்சத்தில் மருத்துவர் ஆலோசனைப்படி Xray Shield என்கிற கவசத்தை அணிந்து எக்ஸ்ரே எடுக்கலாம். மற்றபடி, கருத்தரித்த பின்பு 5 நிலையில் மட்டும் ஸ்கேன் எடுத்தால் போதுமானது.கருத்தரித்த முதல் நாளில் இருந்து 9 வாரத்துக்குள் Early Pregnancy Scan எடுக்க வேண்டும். உருவான கரு கர்ப்பப்பையில்தான் உள்ளதா என்பதை அறியவும், கருத்தரித்த 7 வாரத்தில் குழந்தையின் இதயத்துடிப்பு சரியாக உள்ளதா என்பதை அறியவும் இந்த முதல் ஸ்கேன் உதவும்.11 வாரத்திலிருந்து 13 வாரத்துக்குள் NT ஸ்கேன் எடுக்க வேண்டும். குழந்தைக்கு மூக்கின் எலும்பு சரியாக உருவாகி உள்ளதா என்பதை அறிவதற்கும், Down syndrome போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிவதற்கும் இந்த ஸ்கேன் உதவுகிறது.

குழந்தையின் எல்லா உடலுறுப்புகளும் முழுமையாக உருவாகியிருக்கிறதா என்பதை அறிவதற்கு 20 – 22 வாரத்துக்குள் Anomaly Scan எடுக்க வேண்டும். இந்த ஸ்கேன் முக்கியமானது என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி முழுமையான பரிசோதனை வசதிகளுடைய மையங்களில் எடுக்க வேண்டும். 28-வது வாரத்தில் Second Trimester Scan எடுக்க வேண்டும்.குழந்தையின் வயிற்றுக்குமிழி (Stomach Bubble) சரியாக உருவாகியுள்ளதா என்பதை அறிவதற்கு இந்த ஸ்கேன் உதவுகிறது. 36-லிருந்து 37 வாரத்துக்குள் Third Trimester Scan எடுக்க வேண்டும். குழந்தையின் எடை, கர்ப்பப் பையில் குழந்தையைச் சுற்றியுள்ள நீரின் அளவு(Aminiotic fluid index) போன்றவை சரியாக உள்ளதா என்பதை அறிவதற்கு இந்த ஸ்கேன் உதவுகிறது.
குழந்தையின் எடை குறைவது, குழந்தையின் எடை சரியான அளவில் அதிகரிக்காதது, கர்ப்பப் பையிலுள்ள நீரின் அளவு குறைவது, தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகமாவது, கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது மற்றும் பிற மருத்துவ பிரச்னைகளை கண்டறிவதற்கு தேவைப்படும் பட்சத்தில் Doppler Scan எடுக்கலாம்.”
ht444815

Related posts

பிறந்த குழந்தையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்

nathan

கர்ப்ப காலத்தில் அதிக உடல் எடை – உடல்நல விளைவுகள்!

nathan

குறைந்த எடையில் பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி?

nathan

35-வது வாரத்தில் குழந்தை பிரசவிப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்

nathan

குழந்தைப்பேறுக்கு இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan

கோடை காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan

எப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் தெரியுமா?

nathan

கருவுற்றிருக்கும் நிலையில் இரத்தசோகை குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

nathan

சுகப்பிரசவத்தை அளிக்கும் கர்ப்ப கால வாக்கிங்

nathan