29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701030954069681 women in love SECVPF
மருத்துவ குறிப்பு

காதலிக்கும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

ஒருபோதும் காதலில் அத்துமீறாதீர்கள். காதலின் புனிதத்தை காப்பாற்றும் உறுதி இருந்தால் மட்டும் காதலியுங்கள். இதை புத்தாண்டு காதல் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

காதலிக்கும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
1. காதலியோடு செலவிடும் நேரத்தை காதலிக்கவும், காதலுக்காகவும் மட்டும் செலவிடுங்கள். காதலுக்கும் கடமை உணர்வு மிக முக்கியம். அதனால் காத்திருக்கச் செய்தல், சந்திப்பை தாமதப்படுத்துதல், ஒத்திப்போடுதல் ஆகியவற்றை தவிர்த்திடுங்கள். சந்திப்பின்போது இடையூறு இல்லாத, பாதுகாப்பான சூழலை உருவாக்கி கடைப்பிடியுங்கள். சூழல் நன்றாக அமைந்துவிட்டால் காதலி நம்பிக்கையுடன் அன்பை வெளிப்படுத்துவாள்.

2. மெல்லிய புன்னகையும், லேசான தொடுதலும் அன்பை அதிகப்படுத்தும். முதலில் வாழ்த்து கூறுங்கள். புத்துணர்ச்சியான விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இனிமையானதை மட்டும் பேசுங்கள். கவலைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்களை பகிர்வதை தவிர்த்திருங்கள். புத்தாண்டு சந்திப்பில் புன்னகையும், மகிழ்ச்சியும் நிரம்பிவழியட்டும்.

3. பெண்கள் ஷாப்பிங் பிரியர்கள். வெளியில் அழைத்துச் செல்வது அவர்களை அலாதி இன்பத்தில் ஆழ்த்தும். ‘வெளியே போலாமா?’ என்ற வார்த்தையை கேட்டவுடன் அவர்களின் முகம் மலர்வதை காணலாம். நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள பூங்கா, தியேட்டர், உணவு விடுதி, ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். கவலைகளை மறந்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

4. நண்பர்களுடன் இருந்தாலும் காதலிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சொக்கிப் போவார்கள். மற்றவர்களின் மத்தியில் காதலியை அழைத்துப் பேசுவது, உணவு பரிமாறுவது, கவனிப்பது போன்றவைகளை அளவோடு செய்யலாம். மற்றவர்கள் அதை கவனித்து கேலி செய்தாலும் காதலிகளுக்கு அது பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்கினால், காதலி உங்கள் மீது பலமடங்கு பாசத்தைகாட்டுவாள்.

5. பெண்கள் நினைவுப் பரிசுகளை மிகவும் விரும்புவார்கள். சந்திக்கும்போதெல்லாம் ஏதாவதொன்றை பரிசளிக்க முடிந்தால் நல்லது. பெரிய பரிசு என்றில்லை, ஒரு ரோஜா பூ கொடுத்தால்கூட அதையும் ஏற்றுக்கொள்வார்கள். ஒருநாள் தவறினாலும் இன்று ரோஸ் இல்லையா? என நெகிழ்வார்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது வழங்கும் சின்னச்சின்ன பரிசுப் பொருட்களை, உங்களைப் போலவே காதலியும் நினைவுச் சின்னம்போல் பாதுகாப்பாள். எனவே சந்திப்பை பரிசுகளால் இனிமையாக்குங்கள்.

ஒருபோதும் காதலில் அத்துமீறாதீர்கள். காமத்தை கலக்காதீர்கள். காதலின் புனிதத்தை காப்பாற்றும் உறுதி இருந்தால் மட்டும் காதலியுங்கள். இதை புத்தாண்டு காதல் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளுங்கள்.201701030954069681 women in love SECVPF

Related posts

சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

nathan

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

nathan

கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டா உயிருக்கு ஆபத்து இல்லாம எப்படி நிறுத்துவது?தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

வெள்ளைப்படுதலை வராமல் தடுக்கும் இயற்கை மருத்துவம்

nathan

கணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்!

nathan

உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்

nathan

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?

nathan

மனம்: நலம்.. நலமறிய ஆவல்…

nathan