29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701020810190251 happy life give 9 Ways SECVPF 1
மருத்துவ குறிப்பு

வாழ்க்கையை வசப்படுத்த – 9 வழிகள்

புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் தொடரவேண்டும் என்றால் நீங்கள் 9 விஷயங்களில் உறுதியாக இருக்கவேண்டும்.

வாழ்க்கையை வசப்படுத்த – 9 வழிகள்
புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் தொடரவேண்டும் என்றால் நீங்கள் 9 விஷயங்களில் உறுதியாக இருக்கவேண்டும்.

1. உறுதிமொழி

நிறைய பேர் புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் 90 சதவீதம் பேர் அந்த உறுதியை பாதியிலேயே கைவிட்டுவிடுகிறார்கள். அதனால்தான் வெகுசிலரே திட்ட மிட்டபடி வெற்றி சிகரத்தை அடைகிறார்கள். உங்கள் உறுதிமொழி என்னவாக இருக்கும்?

இந்த வருடம் உடல் எடையை குறைப்பேன், அரசு வேலைக்குச் செல்வேன், வீடு கட்டுவேன், வண்டி வாங்குவேன், திருமணம் செய்வேன், தொழில் தொடங்குவேன், பிரச்சினைக்குரிய ஏதாவது ஒரு பழக்கத்தை கைவிடுவேன்.. என்று எதுவாகவும் இருக்கலாம். அதை குறிப்பிட்டு நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த லட்சியத்தில் உறுதியாக இருங்கள்.

அந்த உறுதிமொழியில் இருந்து ஒருவர் பின்வாங்குகிறார் என்றால் அதற்கு, வழக்கமான சில பலவீனங்களே காரணம். சோம்பலும், முயற்சியின்மையுமே அதற்கு முக்கிய காரணம். உடற் பயிற்சி மேற்கொண்டு உடல் பருமனை குறைப்பேன் என்று உறுதியெடுப்பவர்கள் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே அதே உற்சாகத்தில் பயிற்சி செய்கிறார்கள். பிறகு சின்னச் சின்ன தடைகளை காரணமாக காட்டி, இலக்கை கோட்டை விட்டுவிடுகிறார்கள். எனவே புத்தாண்டில் நினைத்ததை சாதிக்க உறுதிமொழியில் உறுதியாக இருங்கள்.

2. வெளிப்படைத்தன்மை

‘உடல் எடையை குறைக்க வேண்டும்’ என்பது உங்கள் உறுதிமொழி என்று வைத்துக்கொள்வோம். அது உங்கள் சொந்த விஷயம் என்றாலும், அதை வெளிப்படையாக மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதில் தவறு இல்லை. பகிர்ந்துகொள்ளும்போது உங்கள் நலம் விரும்பிகளால் அதில் உங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவ முடியும். ‘என்ன எடையை குறைச்சிடுவேன்னு சபதம் போட்டே?’ என்று எதிர்மறையாக குத்திக் காட்டிப் பேசுபவர்கூட உங்களின் லட்சியத்திற்கு உத்வேகம் தரலாம். அதனால் ஆரோக்கியமான உறுதிமொழிகளை ரகசியமாக வைக்க வேண்டியதேவையில்லை.

3. நல்ல இலக்குகள் மட்டும்

உங்கள் புத்தாண்டு உறுதிமொழிகள் தெளிவானதாக இருக்கவேண்டும். தேவையற்றதாகவும், போலி கவுரவம் கொண்டதாகவும் அது இருக்கக்கூடாது. அவசியமற்ற இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அவஸ்தை பட்டுவிடவும் கூடாது. உயர்ந்த வேலைக்கு போவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு, இருக்கிற வேலையையும் இழந்துவிடக்கூடாது. இப்படி அதிரடியான செயல் எதிலாவது ஈடுபட்டால், வாழ்வின் அடுத்தகட்ட வளர்ச்சிகளான திரு மணம், குழந்தைப் பேறு, வீடு வாங்குதல் போன்ற எல்லா திட்டங் களிலும் நெருக்கடி ஏற்பட்டுவிடும். பின்பு வருடத்தின் முடிவில் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, தனக்கு எதுவுமே சரியாக அமையவில்லை என்று ஏங்க வேண்டியதாகிவிடும். எனவே ஒருவர் சிறந்த லட்சியத்தை இலக்காக கொண்டு செயல்படுவது தவ றல்ல, ஆனால் தனது திறனறிந்து செயல்படுவது முக்கியமாகும்.

4. எளிமையே பெருமை

வாழ்க்கைக்கு எளிமை தேவை. அதுபோல் உங்கள் புத்தாண்டு உறுதிமொழியிலும் எளிமை தென்படவேண்டும். உங்களுக்கு தேவையான வீடோ, வாகனமோ, விலைஉயர்ந்த பொருட்களோ வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கும்போது, அது உங்களுக்கு அத்தியாவசியமானதாக இருக்கவேண்டும். அடுத்தவர்களை பார்த்து, அடுத்த வீட்டைப்பார்த்து ஆசைப்பட்டு அதை வாங்க தீர்மானிக்கக்கூடாது. பகட்டாக, படோபடாபம் காட்டிக் கொள்வதற்காக வரவுக்கு மீறி செலவு செய்வது வாழ்க்கையை இக்கட்டில் கொண்டுபோய்விட்டுவிடும்.

5. மூழ்கினால் முத்தெடுக்கலாம்…

கடற்கரையில் கால்கடுக்க நின்றால் கிளிஞ்சல்கள் மட்டுமே கிடைக்கும். முத்துகள் கிடைப்பதில்லை. மூழ்கினால்தான் முத்தெடுக்க முடியும். இலக்கை நோக்கிய முயற்சிகளில் மூழ்கிப் போனால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டுவிட்டு, அந்த இலக்கை அடைய கடுமையாக உழைக்கவேண்டும். உழைப்பில் மூழ்குவதை புத்தாண்டின் சுவாசமாகக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

6. ஒத்திப்போடவேண்டாம்

எடுத்த உறுதிமொழியை இன்றே நடைமுறைப்படுத்த முயற்சிசெய்யுங்கள். நாளை தொடங்கப் போவதாக ஒத்திப்போடவேண்டாம். எப்போது முடிவெடுத்து தயாராகிவிட்டீர்களோ, அது எந்த தினமாக இருந்தாலும் வேலையை தொடங்கிவிடவேண்டியதுதான். நல்ல தொடக்கம்தான் சிறந்த முடிவைத் தரும். எப்போதும் தயார் நிலையில் இருப்பதே வெற்றிக்கு அடிப்படை என்பதை சிந்தனையில் பதிய வையுங்கள்.

7. குடும்ப ஒருங்கிணைப்பு

உங்களை எப்போதும் தனிநபராக நினைத்துக்கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு பின்னால் ஒரு குடும்பமும், சமூகமும் இருக் கிறது என்பதை கருத்தில்கொள்ளுங்கள். உங்கள் லட்சியத்திற்கு பின்னால் தாய், தந்தை, துணைவியர், நட்பு, உறவு, பணியாளர்கள், ஆசிரியர்கள் என்று எவ்வளவோ பேரின் பங்களிப்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் தேவைப்படும். எனவே அவர்களுடன் நட்புறவுடன் தொடர்பில் இருப்பது உங்கள் லட்சிய வெற்றியை எளிதாக்கும். அதுபோல் உங்கள் லட்சியமும், வெற்றியும் உங்களுக்கோ, குடும்பத்திற்கோ மட்டுமல்ல சமூகத்திற்கும் பயன்படவேண்டும். அதற்கு தகுந்தவாறு உங்கள் புத்தாண்டு உறுதிமொழி அமையட்டும்.

8. கொண்டாடுங்கள்

இலக்கு முக்கியம்தான் அதற்காக கொண்டாட்டங்களை புறம்தள்ள வேண்டாம். ஏனெனில் வெற்றியே கொண்டாட்டத்திற்காகத்தான். எனவே இலக்கின் இடையேயும் கொண்டாட்டங்களில் களிப்புறுங்கள். அது சோம்பலை நீக்கி உங்களை இலக்கை நோக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கும்.

9. மாற்றமே நிலையானது

எதுவும் நிலையானதல்ல, வெற்றியும் நிரந்தரமானதல்ல. சாதனைகள் முறியடிக்கப்படக்கூடியவையே. எனவே தோல்வியில் முடங்கிப்போவதும், வெற்றியில் கர்வம் கொள்வதும் வேண்டாம். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள, மாற்றங்களுக்கு ஏற்ப ஈடு கொடுக்க, மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் எதையும் தாங்கி நிலைத்து நிற்கலாம். ‘எதையும் தாங்குவேன்’ என்ற உறுதிமொழியை இன்றே இப்போதே எடுத்துக்கொள்ளுங்கள்.201701020810190251 happy life give 9 Ways SECVPF

Related posts

அதிகாலை நேரத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஏன்? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…லேப்டாப் உபயோகிப்பவரா நீங்கள்? இத படிங்க முதல்ல…

nathan

பூப்பெய்தல் அடைவதற்கு முன் குழந்தைகள் சந்திக்கும் அறிகுறிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்?

nathan

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?உங்களுக்கு எங்க ஐடியா!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சில அற்புத உணவுகள்!

nathan

உங்க குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை எது தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் தைராய்டு வந்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்…40 வயது ஆனாலே இந்த பொடியை 1 ஸ்பூன் தினமும் சேர்த்துக்கனும்!

nathan