28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201612301519163814 how to make stuffed brinjal SECVPF
சைவம்

சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய்

கத்தரிக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. இந்த ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய்
தேவையான பொருட்கள் :

பிஞ்சு கத்தரிக்காய் – அரை கிலோ,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவைக்கு
கறிவேப்பிலை – சிறிது.
கொத்தமல்லி – சிறிதளவு

அரைக்க:

சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 2,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 6 பல்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.

செய்முறை:

* கத்தரிக்காயை பாதி காம்பு வரை நறுக்கி நான்காக கீறி (முழுவதுமாக வெட்டக் கூடாது) வையுங்கள்.

* அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து, (தண்ணீர் சேர்க்க கூடாது) உப்பு சேர்த்து வையுங்கள்.

* இந்தக் கலவையை எல்லா கத்தரிக்காயின் உள்ளேயும் சிறிது சிறிதாக அடைத்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பாதி கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அதில் மசாலா ஸ்டஃப்டு செய்து ஊறவைத்துள்ள கத்தரிக்காய்களை போடுங்கள். அரைத்த மசாலா மீதம் இருந்தால் அதையும் காயோடு சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து, வேக விடவும்.

* அடிக்கடி கிளறி விட்டு வேக வையுங்கள்.

* வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி கிளறி இறக்குங்கள்.

* சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய் ரெடி.

* இதற்கு எண்ணெய் சற்று அதிகமாக சேர்த்து கொண்டால் நன்றாக இருக்கும்.201612301519163814 how to make stuffed brinjal SECVPF

Related posts

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி

nathan

வெஜ் பிரியாணி

nathan

முருங்கைக்காய் அவியல்

nathan

பூண்டு – மிளகுக் குழம்பு

nathan

சுவையான பச்சை பயறு மசாலா

nathan

கல்கண்டு சாதம்

nathan

பாகற்காய் பொரியல்

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்

nathan