29 C
Chennai
Wednesday, Jun 26, 2024
201612271257325413 mochai poriyal SECVPF
சைவம்

மொச்சை பொரியல் செய்வது எப்படி

மொச்சையில் பொரியல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இப்போது மொச்சை பொரியல் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

மொச்சை பொரியல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மொச்சை – 3 கைப்பிடி
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1
பூண்டு – 3 பற்கள்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

தாளிக்க :

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை தட்டி வைக்கவும்.

* மொச்சையை முதல் நாளே ஊற வைத்து காலையில் சிறிது உப்பு போட்டு வேக வைத்து நீரை வடித்து விடவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

* பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* அடுத்து தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் மொச்சையை சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி சிறிது தண்ணீர் தெளித்து மிதமானத் தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்.

* மொச்சை பொரியல் ரெடி.

* இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.201612271257325413 mochai poriyal SECVPF

Related posts

வெண்டைக்காய் வத்தக்குழம்பு

nathan

சுவையான காளான் ரோஸ்ட்

nathan

மஷ்ரூம் மசாலா

nathan

குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

nathan

கொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan

ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி

nathan

பனீர் ஃப்ரைடு ரைஸ் செய்முறை

nathan

வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்

nathan