27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 1440153059 8indianmenthinking
மருத்துவ குறிப்பு

60 நொடியில் தலைவலியில் இருந்து விடுபட என்னவெல்லாம் செய்யலாம்!!!

தலைவலி வந்துவிட்டால் எந்த வேலையும் சரியாக ஓடாது. மற்றும் உடல்நிலையையும் மிக சோர்வாக உணர வைக்கும் இந்த தலைவலி. பெண்கள் தலைவலி ஏற்பட்டால் உடனே வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வார்கள், ஆண்கள் புகைப்பிடித்துவிட்டு, ஓர் டீ குடித்துவிட்டு மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை செய்யும் குணாதிசயம் கொண்டது இந்த தலைவலி. இதிலிருந்து வெறும் 60 நொடியில் தீர்வு காண முடியும் என்றால் நம்புவீர்களா…?

அக்குபஞ்சர் பல வருடங்களாக தலைவலியில் இருந்து எளிதில் விடுபட அக்குபஞ்சர் முறையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். காணொளியை கண்டு எப்படி செய்ய வேண்டும் என அறிந்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் நீரை கொஞ்சம், கொஞ்சமாக சிப் செய்து பருகினால், உங்கள் தலை வலி மெல்ல குறையும். உங்கள் உடலில் நீரின் அளவு அதிகரிக்கும் போது, தலைவலி மெதுவாக குறையும் என கூறப்படுகிறது.

கிராம்பு சூடு செய்த கிராம்பை கைக்குட்டையில் மடித்து, அதை மூச்சினால் உள்ளிழுத்தால், ஒரு நிமிடத்தில் தலைவலி குறைந்துவிடும்.

துளசி டீ டீ, ப்ளாக் காபியை விட, விரைவில் தலைவலியை போக்க கூடிய திறன் கொண்டது துளசி டீ. தலை வலிக்கான ஓர் சிறந்த வீட்டு நிவாரணியாக துளசி டீ கருதப்படுகிறது.

உப்பும், ஆப்பிளும் அடுத்த முறை உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால், இந்த எளிய வீட்டு நிவாரண முறையை பின்பற்றி பாருங்கள். ஆப்பிளை வெறுமென மென்று சாப்பிடாமல், அறுத்த ஆப்பிளில் அதன் மேல் உப்பு கொஞ்சமாக தூவி சாப்பிட்டால் தலைவலி குறையும்.

பெப்பர் புதினா டீ தலைவலியை போக்க உதவும் மற்றுமொரு சிறந்த டீ பெப்பர் புதினா டீ.ப்ளாக் டீயில் ஓரிரு புதினா இலைகளை சேர்த்து பருகினால் தலைவலி ஒரு நிமிடத்தில் குறைந்துவிடும். சிலர் ப்ளாக் டீயில் பால் சேர்த்து பருகுவார்கள். ஆனால், அவ்வாறு பால் சேர்ப்பதை தவிர்த்துவிடவும்.

இஞ்சி இளசான ஓர் சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இவ்வாறு மெல்லுவதால் ஒரு நிமிடத்தில் உங்கள் தலைவலி குறைய ஆரம்பித்துவிடும். இது, தலைவலியில் இருந்து விரைவாக குணமடைய உதவும் சிறந்த வீட்டு நிவாரண முறையாகும்.

மகிழ்ச்சியான மனநிலை சிலருக்கு இது வியப்பாக இருக்கும். ஆனால், நீங்கள் கண்டதை நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்தாலே உங்களது தலைவலி ஓர் நிமிடத்திற்குள் குறைந்துவிடும்.

21 1440153059 8indianmenthinking

Related posts

தெரிஞ்சிக்கங்க…கை கழுவுவதற்கு சிறந்த சானிடைசரை தேர்வு செய்வது எப்படி?

nathan

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

nathan

தலைவலியின் வகைகள்

nathan

கர்ப்ப காலத்தில் உங்கள் பற்களை எவ்வாறு பாதுகாப்பது?

nathan

ரத்தத்தில் ஒளிந்திருக்கும் 3 மாத ரகசியம்!

nathan

பற்கள் அசிங்கமாக இருப்பதற்கு உங்களது இந்த செயல்கள் தான் காரணம் என்பது தெரியுமா?

nathan

பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா?

nathan

அவசியம் படிக்க.. கண்களை பாதுகாப்போம்

nathan

ஆஸ்துமா இருக்கா? சரியா மூச்சுவிட முடியலையா? அப்ப இத படிங்க!

nathan