28.3 C
Chennai
Thursday, Mar 19, 2026
12004891 483836711794743 6386625289290702249 n
சிற்றுண்டி வகைகள்

வெங்காய ரிங்ஸ்

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1
மைதா – 1/2 கப்
சோள மாவு – 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
பிரட் தூள் – தேவையான அளவு
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை: முதலில் வெங்காயத்தை பட்டையான வளையங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு வெங்காய வளையத்தை, கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, பிரட் தூளில் கோட்டிங் கொடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து வெங்காய வளையத்தையும் மாவு மற்றும் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து, அவற்றின் மேலே சாட் மசாலாவை தூவி பரிமாறினால், வெங்காய ரிங்ஸ் ரெடி!!!12004891 483836711794743 6386625289290702249 n

Related posts

பீர்க்கங்காய் தோல் துவையல்!

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

முட்டை – சப்பாத்தி ரோல்

nathan

நட்ஸ் டிரைஃப்ரூட்ஸ் ரிச் லட்டு

nathan

சோயா சன்க்ஸ் சாண்ட்விச்

nathan

சத்தான பச்சைப்பயறு துவையல்

nathan

சுவையான சரவண பவன் கைமா இட்லி

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan