25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
DbKaiS1
சூப் வகைகள்

பார்லி லெண்டில்ஸ் சூப்

என்னென்ன தேவை?

லெண்டில்ஸ் – 1 கப்
பார்லி – 1/2 கப்
ரோஸ்மேரி இலைகள் – சிறிது
வெங்காயம் – 1
தக்காளி – 1
செலரி – 4
காரட் – 1
பூண்டு – 4 பல் நசுக்கியது
உப்பு, மிளகு தூள் – தேவையான அளவு
சீஸ் – விரும்பினால்


எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, செலரி, காரட், பூண்டு முதலியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பிரஸர் குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயம் சேர்த்து கொள்ளவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய செலரி, காரட்டை இத்துடன் சேர்க்கவும். பார்லி, லெண்டில்ஸ்யை சேர்த்து கொள்ளவும்.

தேவையான அளவு தண்ணீர் (சுமார் 4 – 5 கப் ) மற்றும் ரோஸ்மேரி இலைகள் சேர்த்து கொள்ளவும். இதனை பிரஸர் குக்கரில் 4 முதல் 5 விசில் வரும் வரை வேகவிடவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகுதூள் சேர்த்து கலந்து கொள்ளவும். சத்தான சூப் ரெடி. பறிமாறும் பொழுது விரும்பினால் சீஸ் சேர்த்து கொள்ளலாம்.DbKaiS1

Related posts

தாய்லாந்து மஷ்ரூம் சூப்

nathan

சுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்

nathan

சுவையான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

முருங்கை கீரை சூப் செய்ய…

nathan

சத்தான சுவையான பச்சை பயறு சூப்

nathan

கேரட், சோயா சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

பீட்ரூட் சூப்

nathan

சத்து நிறைந்த காய்கறி சூப்

nathan