3Nqfh0k
சிற்றுண்டி வகைகள்

தால் கார சோமாஸி

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 2 கப்,
ஊறவைத்து வேகவைத்த பட்டாணி,
ஊறவைத்து வேகவைத்த
கொண்டைக்கடலை – தலா ஒரு கப்,
வேகவைத்த உருளைக்கிழங்கு – 4,
பெரிய வெங்காயம் – 4 (நறுக்கவும்),
பச்சை மிளகாய் – 6 (நறுக்கவும்),
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

கோதுமை மாவுடன் உப்பு, நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, வேகவைத்த கொண்டைக்கடலை, பட்டாணி சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கை மசித்துச் சேர்த்து நன்றாக வதக்கவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும் (தண்ணீர் விடத் தேவையில்லை).

பிசைந்து வைத்த கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சிறிய சப்பாத்திகளாக இடவும். சப்பாத்தியில் மூன்று டீஸ்பூன் மசாலாவை வைத்து மடித்து, ஓரங்களில் நீர் தடவி மூடி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும் (எண்ணெயில் மசாலா பிரிந்து வராதபடி ஒவ்வொன்றாகப் போட்டு எடுக்கவும்).3Nqfh0k

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான கிரிஸ்பி பனானா

nathan

சுவையான ஆலு பக்கோடா

nathan

எளிய முறையில் அவல் கேசரி

nathan

ஆரோக்கியமான சாமை அரிசி புலாவ்

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

nathan

சாமை சிறுபருப்பு  முள்ளு முறுக்கு

nathan

சுவையான… இனிப்பு தட்டை

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan