32.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
14947388 1137690486278006 2674011796568102220 n
சிற்றுண்டி வகைகள்

குபூஸ்(அரேபியன் ரொட்டி)

துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்த குபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட்விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள். க்ரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும், BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன், பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம். இதை கோதுமை மாவிலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்

மைதா – மூன்று டம்ளர்
ஈஸ்ட் – ஒரு பின்ச்
சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி
சூடான பால் – 3/4 டம்ளர்
உப்பு – அரை தேக்கரண்டி
பட்டர் – 75 கிராம்

செய்முறை

1.சூடான தண்ணீரில் உப்பு, சர்க்கரை, சூடான பால், ஈஸ்ட், பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை, மைதா கலவையில் கலக்கவும்.

2.ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து மூன்று மணி நேரம் அப்படியே வைக்கவும்.

3.மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.பிறகு அதை எடுத்தால் புஸ் என்று உப்பி இருக்கும்.

4.அதை எடுத்து மறுபடியும் குழைத்து ஒரு கமலா பழம் சைஸ் உருண்டை எடுத்து நல்ல நிறைய மைதா மாவு தடவி நடுவிலிருந்து உருட்டவும்.

5.தேய்க்கும் போதே நல்லா சூப்பரா ரவுண்டு ஷேப் வரும் அதை எடுத்து தவாவில் போட்டு சுட்டெடுக்கவும். நல்ல பொங்கி வரும்.

6.சூப்பரான குபூஸ் ரெடி.இதற்கு தொட்டு கொள்ள எல்லாவகையான குருமாக்கள், சிக்கன், ஹமூஸ், கார்லிக் பேஸ்ட், க்ரில்டு சிக்கன் எல்லாமே பொருந்தும்.14947388 1137690486278006 2674011796568102220 n

Related posts

கப் கேக் செய்வது எப்படி ?

nathan

சுவையான முடக்கத்தான் கீரையில் தோசை

nathan

வெஜ் கட்லெட் லாலிபாப்

nathan

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

nathan

ஜவ்வரிசி பக்கோடா

nathan

புளி அவல் செய்வது எப்படி

nathan

கேரளா உன்னி அப்பம்

nathan

சத்தான கார்ன் ரவை கிச்சடி

nathan

பானி பூரி!

nathan