29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201612240817276489 Stress can affect youth SECVPF
மருத்துவ குறிப்பு

இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம்

முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது இன்றைய இளம்பருவத்தினருக்கு வசதிகள் அதிகரித்திருக்கிற அதேவேளையில், அவர்களுக்கு மன அழுத்தமும் கூடியிருக்கிறது.

இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம்
முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது இன்றைய இளம்பருவத்தினருக்கு வசதிகள் அதிகரித்திருக்கிற அதேவேளையில், அவர்களுக்கு மன அழுத்தமும் கூடியிருக்கிறது என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.

இந்நிலையில், மிகுந்த மன அழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வுகள், இளம்பருவத்தினரை வெவ்வேறு வழிகளில் பாதிக்கும் என ஓர் ஆய்வின் அடிப்படையில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் கூறுகிறது.

குறிப்பாக, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மூளையில், இன்சுலா என்று அழைக்கப்படும், உணர்ச்சிகள் மற்றும் பிறர் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பகிர்ந்துகொள்ளும் தன்மை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு பகுதி அளவில் சிறியதாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மூளையில், இன்சுலாவின் அளவு வழக்கத்தைவிடப் பெரிதாக இருந்தது.

இந்தத் தகவல், இளம்பருவ ஆண் பாலித்தனவரை விட, அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் ஏன் இளம்பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று விளக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு வேதனைமிக்க அல்லது அச்சுறுத்தலான நிகழ்வு ஏற்பட்ட பிறகு, இரு பாலினத்தவர்களுக்கு இடையே காணப்படும் அறிகுறிகள் வேறுபட்டதாக இருக்கும் என்றும், எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வெவ்வேறு வழிகளில் இருக்க வேண்டும் என்று இந்த கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழு, அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் அவதிப்படும் சிறுமிகளுக்கு, வழக்கத்தை விட மிக விரைவாக அவர்களின் மூளையில் உள்ள இன்சுலா என்ற பகுதி முதுமை அடையும் என்று கூறியுள்ளது. இந்த இன்சுலாதான் உணர்வுகளையும், வலிகளையும் புரிந்து உணர்த்தும் பகுதியாகும்.

இன்சுலா அல்லது இன்சுலார் கார்டெக்ஸ் என்று அறியப்படும் பகுதி, மூளையில் அமைந்துள்ள ஒரு சிக்கலான பகுதியாகும். இது மூளையின் உள்ளே ஆழமாக உள்ளது. பல இணைப்புப் பகுதிகளை கொண்டிருக் கிறது.

உணர்வுகளைப் புரிய வைப்பது மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் சமிக்ஞைகளைக் கண்டறிவதில் இப்பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வுக்காக, 9 முதல் 17 வயதுள்ள 59 பேரின் மூளைகளை ஸ்கேன் செய்தனர்.

அந்த ஆய்வில், 14 டீனேஜ் பெண்களும், 16 டீனேஜ் ஆண்களும் அடங்கிய குழுவில் குறைந்தது ஒரு முறை மிகுந்த மன உளைச்சல் அல்லது அதிர்ச்சி ஆகியவற்றை அனுபவித்தவர்களும், இரண்டாவது குழுவில் இது போன்ற பிரச்சினைகளைச் சந்திக்காத 15 டீனேஜ் பெண்களும், 14 டீனேஜ் ஆண்களும் இருந்தனர்.

இரண்டாவது குழுவுடன் ஒப்பிடுகையில், முதல் குழுவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் மூளைகளில் இன்சுலாவின் முகப்புப் பகுதியின் அளவும், கொள்ளளவும் மாறி இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன. இரண்டாவது குழுவில் இருந்த பாதிக்கப்படாதவர்களின் இன்சுலா பகுதியின் அளவு வழக்கம் போலவே இருந்தது.

தீவிரமான அல்லது நீண்டகால மன அழுத்தத்துக்கு ஆளானதால் அவர்களின் இன்சுலா பகுதி மாறியுள்ளது என்றும், இந்த மாற்றம், அதிர்ச்சிக்குப் பின்பு மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகள் வளர்வதற்கு முக்கிய பங்கு வகிப்பதைக் காண்பிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மன உளைச்சல் ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் உடல் ரீதியாகவும், உணர்வுகள் ரீதியாகவும் ஏற்படும் வித்தியாசமான வெளிப்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என முன்னணி ஆய்வாளரான மேகன் கிளாபண்டி கூறுகிறார். 201612240817276489 Stress can affect youth SECVPF

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் உண்டாகும் கால் வலிக்கு தீர்வு தான் என்ன?

nathan

தலைவலி வந்ததும் முதலில் இதை ட்ரை பண்ணுங்க…..!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் ஏன் மனைவியிடம் பொய் சொல்றாங்க தெரியுமா?

nathan

உங்க காதலரை/ காதலியை எப்படி உங்கள் வசம் வைத்துக் கொள்வது என தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! வெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

தம்பதியர் இந்த விஷயங்களை பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…

nathan

பெண்களை அவதிக்குள்ளாக்கும் எலும்பு தேய்மானம்

nathan

தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

nathan