எண்டோமெட்ரியோசிஸ் அல்லது இடமகல் கருப்பை அகப்படலம் (Endometriosis) என்பது அடிக்கடி பெண்களுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும். பொதுவாக இது கருப்பை, குடல் அல்லது இடுப்புப் பகுதியை சுற்றியுள்ள திசுக்களை ஈடுபடுத்துகிறது. கருப்பையினுள் உள்ள திசுக்கள் அரிதாக இடுப்புப் பகுதிக்கு அப்பால் பரவி கடுமையான வலியை ஏற்படுத்தும்.
இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான சரியான காரணத்தை யாரும் இதுவரை கூறவில்லை. ஆனால் சில காரணிகள் இதில் அடங்கும். அவை மரபியல், ஹார்மோன் சமநிலையின்மை அல்லது பிறப்பின் போது கருப்பை திசுவில் ஏற்படும் கோளாறு. இந்த நிலையை சரிசெய்ய இடமகல் கருப்பை அகப்படலம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆர்கானிக் உணவுகள் இரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட காய்கறிகள், ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிற ஹார்மோன்களை பாதிக்கும். எனவே இயற்கையாக ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்படும் காய்கறிகளை தேர்வு செய்வது முக்கியம்.
மீன்கள் அதிகளவு EPA/DHA நிறைந்த உணவுகள், இடமகல் கருப்பையினால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும்.
ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் இந்த விதைகள் ஈஸ்ட்ரோஜன் அளவை மேம்படுத்த உதவும். எனவே இவற்றை தினசரி 3 தேக்கரண்டிகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
குறுக்குவெட்டு காய்கறிகள் குறுக்குவெட்டு காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்றவற்றில் உள்ள இண்டோல்-3-கார்பினோல், கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்ற பயன்படுகின்றன. ஆகவே இந்த காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
வெண்ணெய் பழம்/அவகேடோ இதில் அனைத்து ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளன. இவற்றை உட்கொண்டால் ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யும் மற்றும் வீக்கத்தைக் குறைக்க பயன்படும்.
அதிக கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிக கொழுப்புக்கள் நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வீக்கத்தை அதிகப்படுத்தும்.
பாக்கெட் பால் பொருட்கள் பாக்கெட் பாலில் ஊக்கப் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் மிகவும் அதிகமாக உள்ளன. இவை ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை எடுத்துக் கொள்வதன் மூலம் வலி அதிகரிகமாகும் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு குறையும். ஆகவே இவற்றையும் தவிர்க்க வேண்டும்.
மது ஆல்கஹால் குடித்தால், வீக்கம் அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடும் குறையும். எனவே மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
காப்ஃபைன் காப்ஃபைன் நிறைந்த பானங்களான காபி, டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் காப்ஃபைன் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்