26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl4361
​பொதுவானவை

வெஜ் கீமா மசாலா

என்னென்ன தேவை?
பனீர் துருவல் – 1/4 கப்
பச்சைப்பட்டாணி- 2 டேபிள்ஸ்பூன்
கேரட் – 1
காலிஃப்ளவர் துருவல் – 1/4 கப்
குடைமிளகாய் – பாதி
வெங்காயம் – 2
தக்காளி – 1
முந்திரிப் பருப்பு – 8
பால் – 1/4 கப்
இஞ்சி, பூண்டு
விழுது – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கசூரி மேத்தி – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை சூடான பாலில் ஊற வைக்கவும். தக்காளியை அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். நன்கு வதங்கியவுடன், அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
2 நிமிடங்கள் வதக்கவும்.

மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்க்கவும். பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும். 2-3 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது, நறுக்கிய கேரட், குடைமிளகாய், துருவிய பனீர், துருவிய காலிஃப்ளவர், பட்டாணி ஆகியவற்றைப் போடவும். 1 கப் தண்ணீர் சேர்க்கவும். 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும். முந்திரிப் பருப்பை நன்கு அரைத்து கொள்ளவும். பாலோடு சேர்த்து அரைக்கவும். கடாயில் சேர்க்கவும்.

நன்கு கிளறிவிட்டு, ஒரு கொதி வந்ததும், கசூரி மேத்தி போட்டு, கலக்கி விட்டு, அடுப்பை அணைக்கவும். முந்திரி சேர்த்தவுடன் இந்தக் கலவை சிறிது சேர்ந்து கொண்டு கெட்டியாகி விடும்.

உங்கள் கவனத்துக்கு…

முந்திரி இல்லாவிட்டால் சிறிது ஃபிரெஷ் கிரீம் சேர்க்கலாம். கிரீம் சேர்த்து அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம்.கேரட்டை பொடியாக நறுக்கவும். இல்லாவிட்டால் வேக நேரம் ஆகும்.சப்பாத்தி அல்லது ஜீரா புலாவுக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.sl4361

Related posts

பெண்களே ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா?

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தக்காளி – சின்ன வெங்காய தொக்கு

nathan

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

nathan

முட்டை நூடுல்ஸ் / Egg Noodles tamil

nathan

பெண் குழந்தைகளுக்கு தொடுதலை பற்றி சொல்லி கொடுங்க

nathan

கருவாடு ரசம் செய்திருக்கிறீர்களா?… இல்லைன்னா இதை படியுங்க…

nathan

சுவையான ஓட்ஸ் ரவா தோசை

nathan

பச்சை பயறு மிளகு மசாலா

nathan

சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்

nathan