28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
1
மருத்துவ குறிப்பு

குதிரைவால் கொண்டை போட்டால் தலைவலி வரும்

நரம்பு மண்டலத்தில் தூண்டப்பட்டு மூளையின் மூலம் உணரப்படுவதுதான் வலி. மிக கடுமையான வலியாக இருக்கலாம். சுமாரான வலியாக இருக்கலாம். முதுகு வலி, வயிற்று வலி என குறிப்பிட்ட இடத்தில் இருக்கலாம். உடல் முழுவதும் வலி, புளுஜூரம் நேரத்தில் வருவது போல் இருக்கலாம். வலி என்பது பிரச்சினை இருக்கிறது என்பதை கண்டு பிடிக்க உதவியாக இருப்பது ஆகும்.

மூட்டு வலி, புற்று நோய் இவற்றில் நீண்ட காலமாக வலி இருக்கலாம். திசுக்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை அல்லது ஏற்படக் போகும் பாதிப்பினை உணரச் செய்வதுதான் வலி. இந்த வலி சில நொடிகள் முதல் சில வாரங்கள் வரை இருக்கலாம். சில வலிகள் பல வாரங்கள், பல மாதங்கள் இருக்கலாம். ப்ளூ மற்றும் கிருமி தாக்குதல்களின் காரணமாகவும் தசைகளில் வலி ஏற்படலாம். மற்ற காரணங்களாக

* காயம், சுளுக்கு
* சில வகை மருந்துகள்

தாது உப்புகள் சரியின்மை குறிப்பாக குறைந்த பொட்டாஷியம், கால்ஷியம் போன்ற மேலும் சிலவற்றினால் ஏற்படலாம். அதிக உழைப்பு, வேலை ஓய்வின்மை போன்ற காரணங் களினால் ஏற்படும் வலிக்கு சாதாரண வலி நிவாரண மாத்திரைகள் உபயோகிக்கலாம். அடிபட்ட வலியாயின் அவ்விடத்தில் முதல்  மணி நேரம் அடிக்கடி (அதாவது நாள் ஒன்றுக்கு) 4-5 முறை 5-10 நிமிடங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

உடல் உழைப்பின் வலிக்கு ‘மசாஜ்’ நல்ல நிவாரணம் ஆகும். அன்றாடம் முறையான உடற்பயிற்சி வலியினை நீக்கும். யோகா செய்வது மிகவும் நல்லது. நடைபயிற்சி, சைக்கிள், நீச்சல் போன்றவை உடல் வலியின்றி வைக்கும். உடல் உழைப்பு இல்லாமல் ஓர் இடத்திலேயே அமர்ந்தபடி இருந்தாலும் உடல் வலி இருக்கும். தூக்கமின்மை உடல் வலியினை ஏற்படுத்தும். இவை அனைத்தும் சாதாரண வலிக்காக கூறப்பட்டவை. ஆனால்… உங்கள் வலி…

* மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால்

* அல்லது பொறுக்க முடியாத, காரணம் தெரியாத வலி இருந்தால்

* அதிக வீக்கம், சிவப்பு, கிருமி தாக்குதல், தொட்டால் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் * பூச்சி கடி, உடலில் தடிப்பு காரணத்தினால் வலி இருந்தால்

* மருந்துகள் மாற்றம் அல்லது மருந்துகளின் அளவில் மாற்றம் இவற்றிக்குப் பிறகு வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்

* வலியா, குத்துதல் உணர்வா, எரிகின்றதா என தெளிவாக சொல்லுங்கள்.

* எதனால் வலி கூடுகின்றது (உ.ம் நடந்தால், படுத்தால்) எப்போது குறைகின்றது (உ.ம் ஓய்வு, உடற்பயிற்சி) என்பதனையும் தெளிவாகச் சொல்லுங்கள். அநேகருக்கு திடீர் என்ற வலி, சிலருக்கு தொடர் வலி என்று இருக்கும். திடீரென ஒரு பாதிப்பில் ஏற்படும் வலி. சில நாட்களில் சரியாகி விடும். தொடர்ந்து இருக்கும் வலிக்கு தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். பிறகு மாத்திரை எடுத்துக் கொள்ளும் போதும் வலி உணர்வு இருக்கும்.

சில வலி திசுக்கள் பாதிப்பாலும் சில வலிகள் நரம்பு பாதிப்பினாலும் ஏற்படும். பஞ்சு போன்ற காலணிகள் மிகவும் இதம்தான். ஆனால் அவை காலின் வளைவினை தாக்குப் பிடித்து உறுதுணை செய்வதில்லை. எனவே இவர்களுக்கு எப்போதும் கால் வலி இருக்கும். குறிப்பாக பாதம், கணுக்கால், முட்டிகளில் அதிக வலி என்பர். இவர்கள் கால் வளைவுக்கு ஊறுதுணை செய்யும் காலணிகளை பார்த்து உபயோகித்தால் உடனே வலி நீங்கி விடும்.

* இன்றைய சமுதாயமே எப்பொழுதும் செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதை முழு மூச்சாக செய்கின்றனர். இவர்களுக்கு கட்டை விரலின் கீழ் மூட்டு வலி ஏற்படும். இதற்கு உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும். விரல்களுக்கும் ஓய்வு அவசியம்.

* பேண்டின் பின் பாக்கெட்டில் கனத்த மணிபர்சை வைப்பது கால் வலியினை ஏற்படுத்துகின்றது. சயாடிகா என்ற தடித்த நரம்பு அழுத்தம் அடைவதன் காரணமே இவ்வலி ஏற்படுகின்றது. தண்டு வடத்தின் அமைப்பினையும் இது சற்று பாதிக்கின்றது. எனவே தடித்த பர்சை பின் பாக்கெட்டில் வைக்காதீர்கள். உட்காரும் பொழுது பர்சை எடுத்து விடுங்கள்.

* கார் ஓட்டும் சீட் உங்கள் உயரம், உடல் வாகிற்கு ஏற்றார் போல் இல்லை எனும் பொழுதோ, காரில் நீங்கள் நிமிர்ந்து முறையாக அமர்ந்து ஓட்டா வீட்டாலோ கழுத்து வலி ஏற்படும். முறையான சீட், நிமிர்ந்து அமருதல் இவையே இதற்கு நிவாரணம் ஆகும்.

* சோபாவில் தலை ஒரு பக்கம் உயரமாக கால் மறுபக்கம் உயரமாக வைத்து உடல் சோபாவில் மடிந்து தொங்கி டி.வி பார்க்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படியே தூங்கியும் விடுவர். இவர்களுக்கு கழுத்து வலி பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த மாதிரி படுப்பதை அடியோடு தவிர்த்து விட வேண்டும்.

* குழந்தையை தூக்கும் பொழுது குழந்தையின் பக்க வாட்டில் பிடித்து தூக்குவது மணிக்கட்டில் வலி, வீக்கம் ஏற்படுத்தும். குழந்தையின் பின்புறம் கை கொடுத்து தூக்குவது மணிக்கட்டினை காக்கும்.

* லேப்டாப் கம்ப்யூட்டரை ஒரு பையில் தோளில் தொங்க விட்டுக் கொண்டே செல்பவர்களுக்கு தோள்பட்டை, கைமுட்டி போன்ற இடங்களில் வலி ஏற்படும். லேசான வகைகளை பயன்படுத்துவதே இதற்கு நல்லது.

* போனிடைல் (குதிரைவால் கொண்டை) ஸ்டைலில் முடியினை தூக்கி கட்டி தொங்க விடுவோருக்கு தலைவலி ஏற்படுகிறது. மைக்ரேன் தொல்லை உடையவர்களுக்கு மைக்ரேன் வலி கூடுகின்றது.

* சில வாசனைகள் சென்ட் போன்றவை மைக்ரேன் தலைவலி யினை உடனடி ஏற்படுத்துகின்றன. இந்த பாதிப்பு உடையோர் இத்தகைய வாசனைப் பொருட்களை தவிர்த்து விடுவது நல்லது.

* அனைத்து மது வகைகளுமே தலைவலியினைக் கொடுக்கும். மதுவினை புறக்கணிப்பதே நல்லது.

* சிலருக்கு சரியான நேரப்படி உணவு அருந்தாவிடில் அல்லது ஒரு வேளை உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் நடுவே நீண்ட இடைவெளி இருக்கும் பொழுது அதிக தலைவலி ஏற்படும். இதனைத் தவிர்க்க உணவு உண்ண தாமதம் ஏற்படும் பொழுது ஒரு பழமோ அல்லது பாதாம், பிஸ்தா சிறிதளவு என ஏதாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.

* முன் புறம் குனிந்து கனமான பொருளை தூக்குவது முதுகு தசைகளை வெகுவாக பாதிப்பதால் அதிக வலி ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க முட்டியினை மடித்து குத்துகால் போல் அமர்ந்து பொருளை அடுப்பதே முறையாக இருக்கும்.

* கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மணிக்கணக்கில் செய்யும் வேலையா? முறையான நாற்காலி மேசை இல்லையெனில் நீங்கள் முன்னுக்கு சற்று மடிந்தே செய்கின்றீர்களா? கழுத்து பாதிப்பும், கீழ் முதுகு பாதிப்பும் கண்டிப்பாய் ஏற்படும்.

* உங்கள் கம்யூட்டர் மானிடர் உங்கள் கண் பார்வைக்கு நேராக இருக்க வேண்டும். உங்கள் பாதங்கள் பூமியில் பதியும்படி இருக்க வேண்டும். தேவையானால் கீழ் முதுகுக்கு குஷன் தலையணை கொடுத்துக் கொள்ளுங்கள்.

* கண்ணுக்கு அதிக ஸ்ரெயின் அதாவது அழுத்தம் இருந்தால் தலைவலி ஏற்படும். கிட்டப்பார்வை, தூரம் பார்வை, அஸ்டிக்படிவாம் போன்ற கண்பார்வை கோளாறுகளாலேயே இந்த அழுத்தம் ஏற்படுகின்றது. இதனை கண் மருத்துவரிடம் சென்று உடனடி சரி செய்ய வேண்டும்.

* தட்பவெப்பநிலை மாறுபாடு (உ.ம்) அதிக உஷ்ணம் தலைவலியினை ஏற்படுத்தும். ஆக குளிரோ, அதிக சூடோ அதற்கேற்ப உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

* மந்தமான தலைவலி இருக்கிறதென்றால் இரவில் தூக்கத்தில் நீங்கள் பல்லை கடிக்கின்றீர்கள் என்று பொருள். இது தொடர்ந்தால் பல், தாடை பாதிப்பு ஏற்படுவதோடு காது கேட்பதிலும் பாதிப்பு ஏற்படலாம். உங்கள் பல் டாக்டரிடம் செல்லுங்கள். தீர்வு கிடைக்கும்.

* வலியினால் தளர்வும், மரத்து போகுதலும் போன்றவை ஏற்பட்டால் உடனடி மருத்துவரை அணுகவும்.

* தொடர்ந்து இருக்கும் மூட்டுவலி, உடல்வலி, கீழ் முதுகு வலி போன்றவை மிதமான வலியாக இருந்தாலும் கண்டிப்பாய் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை.

* நடைபயிற்சி பல வலிகளுக்கு நிவாரணமாக சிபாரிசு செய்யப்படுகின்றது.

* வலி, வலி என்று அதிலேயே மூழ்கக் கூடாது என ஆய்வுகள் கூறுகின்றன. நண்பர்களுடன் பேசுதல், படித்தல், குறுக்கெழுத்து போட்டி இவைகளில் நம் மனதை திருப்ப வேண்டும்.

* அதிக கொழுப்பு உணவு ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பினை அதிகரிக்கும். சில வகை உணவுகள் மைக்ரேன் பாதிப்பினை அதிகரிக்கும். எனவே பாதிக்கும் உணவுகளை அறிந்து தவிர்த்து விட வேண்டும்.

* வலி இருக்கும் பொழுது நிதானமாக இழுத்து, ஆழமாக மூச்சை உள்ளிருந்து வெளிவிடுங்கள். இது மனதினை சற்று திடப்படுத்தும்…1

Related posts

அவதி நிறைந்த அவசர பயணம்

nathan

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்!

nathan

சுடுநீரில் குளித்தால் ஆண்மை பாதிக்குமா?

nathan

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதோ சில வழிகள்! !

nathan

உளவியலாளர் கூறும் பகீர் உண்மை! தினமும் 3 நேரம் குழந்தைகளிடம் இதை கண்டிப்பாக செய்ங்க…

nathan

உங்க கருவுறாமை பிரச்சனை பற்றிய கட்டுக்கதை என்னென்ன தெரியுமா?

nathan

இதை சாப்பிடுவதல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறதாம்…..

sangika

பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகள்!

nathan

உங்க சரும பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும் மூலிகை இலை..!சூப்பர் டிப்ஸ்

nathan