24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201612201345128998 Kidney damage solving process SECVPF
மருத்துவ குறிப்பு

சிறுநீரக பாதிப்பும் – தீர்க்கும் வழிமுறையும்

ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி உடலை செம்மையாக இயங்க வைப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்காற்றுகிறது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

சிறுநீரக பாதிப்பும் – தீர்க்கும் வழிமுறையும்
சிறுநீரகம்…

மனித உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று.

ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி உடலை செம்மையாக இயங்க வைப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்காற்றுகிறது. சிறுநீரகம் பிரித்தெடுக்கும் கழிவுகள் உடனுக்குடன் வெளியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அதன் பாதிப்பு அதிகமாகும். எனவே தான் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க கூடாது என முதியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அதை முறையாக பாதுகாக்கவில்லை என்றால் பாதிப்பு அதிகமாகிவிடும்.

சிறுநீர் மார்க்கத்தில் அழற்சி என்பது மருத்துவ துறையில் பொதுவாக காணப்படும் ஒரு குறியீடு. மூத்திர பையிலோ, சிறுநீரகத்திலோ இது ஏற்படலாம். மூத்திரம் வரும் பாதையிலும் அழற்சி ஏற்படலாம். சில நேரம் மூத்திர பையிலும் அழற்சி ஏற்படலாம். இதனை சிஸ்டைடிஸ் என்று சொல்லுவார்கள். இந்த அழற்சி கிருமி தொற்று மேலே சென்று சிறுநீரகத்தை தாக்கும் போது அதற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

இது போன்ற நிலையில் சிறுநீர் போகும்போது வலி ஏற்படும் அல்லது அதிகமாக போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இல்லையேல் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மேலும் காய்ச்சல் ஏற்பட்டு, இடுப்பின் இரு பகுதிகளிலும் வலி காணப்படும். பொதுவாக இ கோலி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் இது வருகிறது. பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு இப்பாதிப்பு அடிக்கடி ஏற்படும். உடலுறவில் அடிக்கடி ஈடுபடுவதும் இப்பாதிப்புக்கு ஒரு காரணமாகும்.

எந்த வகை பிரச்சினை? :

உடலில் ஏற்படும் குறியீடுகளை வைத்தே இதை கண்டுபிடித்து விடலாம். ஒரு சில நேரம் சிறுநீர் பரிசோதனை செய்து எந்த வகை பாக்டீரியா என்று கண்டுபிடித்து அதற்கு மருந்து கொடுக்க வேண்டும். நவீன மருத்துவத் தில் ஆன்டி பயாட்டிக் கொடுப்பார்கள். சில நேரம் இந்த ஆன்டிபயாட்டிக் வேலை செய்வதில்லை. அப்போது அசுத்த ரத்தகுழாய் வழியாக மருந்தை ஊசியின் மூலம் செலுத்தி சிகிச்சை அளிப்பார்கள்.

மேலும் சில பரிசோதனைகளும் செய்வ துண்டு. இதில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு மூத்திரத்தில் பழுப்பு வரலாம். பெண்கள் தொப்பு ளுக்கு கீழே வலிக்கிறது என்று சொல் வார்கள். இந்த அழற்சி மேலே சிறுநீரகத்திற்கு போகும் போது வாந்தி கூட ஏற்படலாம்.

பரிசோதனைகள் :

சிறு குழந்தைகளுக்கு இந்நோய் பாதிப்பு வந்தால் காய்ச்சல் ஏற்படும். வயதானவர்களுக்கு இது பெரிய பிரச்சினை. அவர்கள் அறியாமலேயே சிறுநீர் வெளியேறும். அசதியும் தோன்றும்.

திருமணம் ஆன பின்பு வரும் மூத்திர அழற்சியை ஹனிமூன் சிஸ்டைடிஸ் என்பார்கள். பெண்களின் மூத்திர குழாய் சிறியது. அது ஆசன வாய்க்கு அருகே உள்ளது. மாதவிடாய் சமயத்தில் பெண் ஹார்மோன் என்ற ஈஸ்ட்ரோஜன் குறையும் போது மூத்திர அழற்சியும் அதிகரிக்கிறது. மைக்ராஸ் கோப்பில் சிறுநீரை வைத்து வெள்ளை அணுக்களை பார்ப்பதும், சிவப்பணுக்கள் இருக்கிறதா? என்று பார்ப்பதும் நடைமுறையில் உள்ள வழக்கம்.

இப்பிரச்சினையில் நீரழிவு நோயாளிகளும், கர்ப்பிணிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரை பரிசோதிக்க செல்லும் போது முதலில் சிறிது சிறுநீரை கழித்துவிட்டு, பின்பு சுத்தமான பாட்டிலில் அதை பிடிக்க வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதா? என்பதை நவீன மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் தெரிந்து கொள்வார்கள்.

பெண்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் புண் உள்ளதா? என்பதையும் பரிசோதித்து கொள்ள வேண்டும். ரத்தம் அதிகமாக போனால் வேறு நோய்கள் இருக்கிறதா? என்பதை சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குப் புல் வகைகளான திருண பஞ்ச மூலம் என்று சொல்லக்கூடிய தர்ப்பை, நாணல், குசம், கரும்பு ஆகியவற்றின் வேர்களின் கஷாயத்தில் சந்திரபிரபா என்கிற மாத்திரையைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

நெல்லிக்காய் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை இளநீரில் சேர்த்துச் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இளநீர் ஆகாது. தேற்றான் கொட்டை கஷாயம் மிகவும் சிறந்தது. ஆல், அரசு, அத்தி, இத்தி ஆகியவற்றின் கஷாயத்தைச் சிவா குளி கையு டன் சேர்த்துச் சாப்பிடலாம்.

நெருஞ்சி முள், தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றைத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி ஒரு பாட்டிலில் நிறைத்து அடிக்கடி குடித்து வந்தால் பழுப்பணுக்கள் வெளியேறும். முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கச் சிறுநீர் எரிச்சல், சுருக்கு நீங்கும். பரங்கி விதையை 4-8 நாள் வரை கஷாயம் வைத்துச் சாப்பிடச் சிறுநீரக அழற்சி தணியும்.

ஆயுர்வேத மருந்து :

ஆயுர்வேதத்தில் மூத்திரத்தை கபத்தின் அம்சமாக கருதுவார்கள். மூத்திர அழற்சி என்பது சாம மூத்திரம் எனப்படும். இங்கு ஆமத்தன்மையுடைய கபம் சிறுநீரை தாக்கும். அதனால் கசப்பு, துவர்ப்பு சுவையுடைய மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

மாதுளை சாறு :

மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும்.

விளாமிச்சை அல்லது வெட்டிவேரை முடித்துக் கட்டி போட்டு நீர்ப் பானைகளில் ஊற வைக்கவும். இத் ண்ணீரைப் பருக உடல் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

வாழைத்தண்டின் நீரைப் பருக நீர்ச்சுருக்கு, நீர் கல்லடைப்பு, சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி ஆகியவற்றிலிருந்து குணம் கிடைக்கும்.

கீரை வகைகளில் பசலைக்கீரை நீர் சுருக்கு, நீர்க்கடுப்பு நீங்க மிகவும் நல்லது. அது போலவே முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, புதினா போன்றவை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை.

சிறுநீர் எரிச்சல் நீங்க சீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.201612201345128998 Kidney damage solving process SECVPF

Related posts

முதுகு வலி, இடுப்பு வலி இன்றி, இனி நிம்மதியாக வேலை செய்யலாம்!!!

nathan

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!

nathan

காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க. இல்லன்னா உங்க உயிரை விடுவீங்க.

nathan

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் தயிர் பச்சடி

nathan

பசியின்மையை நீங்கும் இலந்தை

nathan

ஆண்களே! மாரடைப்பு ஏற்படப்போவதை சில அறிகுறிகளை வைத்து கணக்கிடலாம்.

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

nathan

கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்

nathan

சூப்பர் டிப்ஸ் நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்…?

nathan