25.2 C
Chennai
Saturday, Dec 28, 2024
sl4227
சிற்றுண்டி வகைகள்

சோயா கைமா தோசை

என்னென்ன தேவை?

தோசை மாவு – 2 கப்,
எண்ணெய் – சிறிதளவு,
சோயா – 100 கிராம்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப),
கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

அரைக்க…

வெங்காயம் – 1/2 (நறுக்கியது),
பூண்டு – 4 பல்,
கறிவேப்பிலை – 5 இலை,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 3.

எப்படிச் செய்வது?

சோயாவை கழுவி அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்துடன், பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதினை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். அத்துடன் தூள் வகைகள் சேர்த்து கிளறிவிடவும். அதில் அரைத்த சோயா சேர்த்து கலந்து 4 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும். இது வெந்து முட்டை பொடிமாஸ் மாதிரி இருக்கும். சோயா கைமா ரெடி. அத்துடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளவும். அதனை சிறிது நேரம் ஆறவைத்துக் கொள்ளவும். இப்பொழுது தோசைக் கல்லினை காயவைத்து கல் சூடானதும், அதில் தோசை மாவினை ஊற்றி நன்கு வெந்தவுடன் அதில் கலந்து வைத்துள்ள கைமா கலவையினை மேலே 2 ஸ்பூன் அளவு ஊற்றி பரவி விடவும். தோசையின் மீது சிறிது எண்ணெயினை ஊற்றி 1 நிமிடம் வேகவிட்டுப் பரிமாறவும்.sl4227

Related posts

கல்மி வடா

nathan

ரவா மசாலா இட்லி

nathan

ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்

nathan

சோளம் – தட்ட கொட்டை சுண்டல்

nathan

மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி…?

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி போண்டா

nathan

அகத்திக்கீரை சொதி

nathan

சாமை கட்லெட்

nathan

வெஜிடபிள் ஆக்ரட்டின்

nathan