25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
fish curry
அசைவ வகைகள்அறுசுவை

மசாலா மீன் கிரேவி

என்னென்ன தேவை?

ஏதேனும் ஒரு மீன் துண்டுகள் – 6
புளிக்கரைசல்- 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கடுகு – அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – அரை கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து அரைக்க:

தேங்காய்த்துண்டுகள் – 3 டேபிள் ஸ்பூன்
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6
பூண்டு – 6 பல்
கிராம்பு – 2
இஞ்சி – கால் துண்டு
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 5
வெந்தயம், சீரகம், சோம்பு – தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – கால் கப்

எப்படிச் செய்வது?

மீன் துண்டுகளை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும். வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். பின்னர் புளிக் கரைசலை ஊற்றி கிளறி, மீன் துண்டுகளை அதனுடன் சேர்த்து லேசாக பிரட்டி, அடுப்பை சிம்மில் வைக்கவும். மீனும் மசாலாவும் ஒன்றோடொன்று கலந்து, கிரேவி பதத்திற்கு நன்றாக சுண்டியதும் அடுப்பை அணைத்து இறக்கவும். ஒரு மணிநேரம் கழித்துப் பரிமாறவும்.fish curry

 

Related posts

நண்டு ஃப்ரை

nathan

சுவையான பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

பேரீச்சப்பழ கேக்/ Date cake/ டேட்ஸ் கேக்

nathan

கணவாய் மீன் பொரியல்

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

nathan

செய்வது எப்படி உருளைக்கிழங்கு கார குழம்பு

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika

மட்டன் சுக்கா

nathan

கிராமத்து கோழி குழம்பு

nathan