தொந்தியைக் குறைப்பதற்கு நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுத்தால் மட்டும் போதுமா என்பதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாமா?
இன்றைய காலகட்டத்தில் இளம் பருவத்தினர் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, நொறுத்தீனி போன்ற பிரச்சனைகளால் உடல்பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். தொப்பையை குறைக்க அவர்கள் எளிய வழிமுறைகளை நாடுகின்றனர். மேலும் தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி கொடுத்தால் போதுமானது என்று நினைக்கிறார்கள்.
தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற கருத்து பலருக்கும் உள்ளது. ஆனால் இது ஒரு தவறான கருத்து.
நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை.
இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.