27.4 C
Chennai
Tuesday, Nov 19, 2024
sl4334
ஐஸ்க்ரீம் வகைகள்

கேசர் பிஸ்தா குல்பி

எவ்வளவு நேரம்?

25 நிமிடங்கள் + 6 மணி நேரம்.

எத்தனை பேருக்கு?

5 நபர்களுக்கு.

என்னென்ன தேவை?

பால் – 600 மி.லி. (3 கப்)
சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
பிஸ்தா பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 2.

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் பால் சேர்த்து 10 நிமிடங்கள் சிறிய தீயில் வைத்துக் காய்ச்சவும். ஒரு டேபிள் ஸ்பூன் சூடான பாலில் குங்குமப்பூவை சேர்க்கவும். தனியாக வைக்கவும். சோள மாவை 3 மடங்கு தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைக்கவும். அடுப்பில் காயும் பாலில் சோள மாவு கரைசலை சேர்க்கவும். அடுப்பை சிறிய தீயில் வைத்துக் கிளறவும். சோள மாவு சேர்ப்பதால் விடாது கிளறவும். பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் பொடி செய்யவும்.

பால் கெட்டியாகும் போது குங்குமப்பூ கலந்த பால் சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு பிஸ்தா, சர்க்கரை பொடி சேர்க்கவும். நன்கு கலக்கவும். நன்கு ஆறியவுடன் குல்பி மோல்டில் போடவும். 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். எடுக்கும் போது, தண்ணீரில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான கேசர் பிஸ்தா குல்பி தயார்!

உங்கள் கவனத்துக்கு…

சோள மாவுக்குப் பதிலாக 1/4 கப் மில்க்மைட் சேர்க்கலாம். பால் கலவையை விடாது கிளறவும். இல்லாவிட்டால் அடி பிடித்து விடும். குல்பி மோல்டு இல்லாவிட்டால், சிறிய டம்ளரில் விட்டு மூடி வைக்கலாம். பிஸ்தாவுக்குப் பதிலாக பாதாம் சேர்க்கலாம்.sl4334

Related posts

ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம்

nathan

அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்…!

nathan

மேங்கோ குல்ஃபி

nathan

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

nathan

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி

nathan

லெமன்-லைம் ஷாட் பாப்சிகிள்

nathan

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்யலாம் வாங்க! அதிக சத்துக்கள் உள்ளன.

nathan