29.5 C
Chennai
Saturday, Jul 26, 2025
naildesign 11 1470893556
நகங்கள்

உடையாத நீளமான நகம் பெற வேண்டுமா? இப்போ இந்த சாய்ஸ் ட்ரை பண்ணுங்க!!

நீளமான நகங்களில் அழகாக ஷேப் செய்து நெயில் பாலிஷ் அடித்துக் கொண்டால் நமது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கும்.

நம்மிடம் பேசுவதற்கு எல்லாரும் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். இதற்காகவே நகத்தை வளர்க்கும்போது, பாதியில் உடைந்து போய்விடும். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்.

ஏதாவது சின்ன வேலை செய்தாலே உடைந்து போய்விடும்படி சிலருக்கு நகங்கள் இருக்கும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும்.

நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர உங்களுக்கு எளிமையான டிப்ஸ் சொல்லட்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகுமுன் தடவி வாருங்கள். நகங்கள் ஊட்டம் பெறும்.

உங்களுக்கு கடினமான நகங்கள் இருந்தால், ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி நீவி விட்டால் மென்மையாக மாறிவிடும்.

கால் விரல்களில் சிலருக்கு சொத்தை எற்படும். கைகளில் கூட உண்டாகும். இதற்கு சிறந்த தீர்வு ரோஸ் வாட்டரை நகங்களுக்கு தடவி வாருங்கள். சொத்தை நகம் கீழே விழுந்து, புதிய நகம் முளைக்கும். இது தவிர நகங்கல் உடையாமலிருக்க கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்துங்கள்.

தேவையானவை : எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் – அரை டீஸ்பூன் லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெய் – சில துளிகள்

பாதம் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் எலுமிச்சை சாறை விடவும். பின் வாசனை எண்ணெயை கலந்து ஒரு பஞ்சினால் நகத்தில் தேய்க்கவும். வாரம் 3 நாட்கள் இப்படி செய்யுங்கள். நகங்கள் உடையாது. பலம் பெறும். வேகமாகவும் வளரும்.

உங்கள் நகங்கள் ஆரோக்கியத்தின் குறியீடு. நகத்தின் ஓரங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கூட அது ரத்த நாளங்களை எளிதில் சென்றடையும்.

ஆகவே அடிக்கடி நெயில் பாலிஷ் போடாமல் நகத்தின் இடுக்களை சுவாசிக்க விடுங்கள். இயற்கையான மருதாணியை அரைத்து போடுவதால் நகங்களில் உண்டாகும் பாதிப்புகள் மறைந்துவிடும். குளிர்காலத்தில் சரும அழகை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் சில குறிப்புகள்! முகத்திற்கு உடனடி பளபளப்பு தரும் பழம் இதுதான்!! ஏன் இரவில் தலைக்கு குளிக்க வேண்டும் என தெரியுமா?

naildesign 11 1470893556

Related posts

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை!…

sangika

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

nathan

நகங்கள் வளர்வதில்லையா? இப்படி பராமரியுங்கள்!!

nathan

உங்களுக்காக சில டிப்ஸ்.. நகங்களை நீளமாக வளர்க்க …

nathan

நக அழகு சாதனங்கள்

nathan

நகம் பராமரிப்பு

nathan

விரல்களுக்கு அழகு…

nathan

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

sangika

மஞ்சள் நிற நகங்களை சரி செய்யமுடியுமா?nail care tips in tamil

nathan