23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
asthma 2707595f
மருத்துவ குறிப்பு

ஆஸ்துமாவுக்கு எளிய சித்த வைத்தியம்

ஜலதோஷம், காய்ச்சல், தலைவலியோடு இந்த குளிர்காலத்தில் இன்னொரு முக்கிய சவாலையும் எதிர்கொள்ள வேண்டும். அது… ஆஸ்துமா. நுரையீரலை பாதிக்கக்கூடிய நோய்களில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த ஆஸ்துமா பாதிப்பு கொண்டவர்களுக்காக வீட்டிலேயே பின்பற்றக்கூடிய சில எளிய மருத்துவமுறைகள் உண்டு.

பொதுவாகக் குழந்தை பருவத்திலும், வெகுசிலருக்கு நடுத்தர பருவத்திலும் பாதிக்கும் ஆஸ்துமாவை தமிழில் சுவாசகாசம் என்று அழைக்கிறார்கள். இந்த சுவாசகாசம் நாள்பட்ட நோயாக கருதப்படுகிறது. மேலும் இந்நோய் பரம்பரையில் யாருக்கேனும் இருந்தால் அவர் சந்ததியினருக்கும் வர வாய்ப்பு உள்ளது.

சுற்றுச்சூழலில் உள்ள ஒரு சில காரணிகளினால் தூசு, மாசு படிந்த காற்று, பூக்களில் உள்ள மகரந்தங்கள், புகை ஆகியவற்றாலும், மருந்துகளாலும், நாம் வசிக்கும் வீடுகளில் உள்ள சில காரணிகளாலும், ஏன் மேலும் நமக்கு ஒவ்வாத சில பொருட்களாலும், இவை ஏற்படும். இதை தவிர்த்து, பயம், கோபம், கவலை, மனஅழுத்தம், ஆகிய உளவியல் காரணங்களாலும் சுவாசகாசம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் உணர்ச்சிநிலை காரணங்களால் உடலில் உள்ள சுவாச குழாய்கள் சுருக்கம் அடைகிறது, மேலும், இதன் உட்சவ்வு பகுதிகளில் அழற்சி ஏற்பட்டு சளி உண்டாகிறது. இதனால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல் மேலும் இதனை தொடர்ந்து நெஞ்சு இறுக்கம், நீடித்த இருமல், மூச்சிரைப்பு ஏற்படும். வெளிவிடும் மூச்சு செய்கை மிகுந்த சிரமமாகவே இருக்கும். அவ்வாறு இருக்கும் நிலையில் ஒருவித ஒலியுடன் கூடிய மூச்சு வெளிப்படும்.

சுவாசகாசம் உள்ளவர்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி அதன் சாற்றை மூக்கில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தால் மூச்சுத்திணறல் மட்டுப்படும்.

ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் குடிநீரிலிட்டு, அதில் திப்பிலிப் பொடி சேர்த்துக் கொடுக்க, இரைப்பு நீங்கும்.

தூதுவளை கீரையை (கீரையின் மொத்தப் பகுதியான சமூலம்) காயவைத்து தூளாக்கி அரை தேக்கரண்டி அளவு தினம் ஒரு வேளை சாப்பிட சுவாசகாசத்தில் ஏற்படும் சளி தொல்லை நீங்கும்.

இஞ்சி துண்டுகள் சிலவற்றை ஒரு கோப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் சிறிது தேன் கலந்து சூடாக அருந்தினால் சுவாசகாசம் நோய் குறையும்.

ஐந்தாறு வில்வ இலைகளுடன் இரண்டு மிளகையும் சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். இப்படி சில நாட்கள் செய்தால் இரைப்பு மட்டுப்படும்.

நஞ்சறுப்பான் செடியின் நான்கு இலைகளுடன், மூன்று மிளகு சேர்த்து அரைத்து உள்ளுக்குக் கொடுக்க சுவாசகாசத்தால் உண்டாகும் இழுப்பு உடனே நிற்கும்.

அரச மரத்தின் உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாட்கள் கொடுப்பதினாலே சுவாசகாசம் தீரும்.

ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர், சுக்கு, கொள்ளு இவைகள் சேர்ந்த குடிநீரில், அல்லிக்கிழங்கின் பொடியைக் கூட்டிக்கொடுக்க இரைப்பிருமல் தீரும்.

ஒரு பிடி துளசியைச்சாறு எடுத்து அச்சாற்றை இரண்டு பாலாடை வீதம் மூன்று வேளையும் சாப்பிட முதியவர்களுக்கு ஏற்படும் சுவாசத் தடை இறுகித் தொல்லை தரும் சளி, கபம், கோழை, மெல்லிய நீர் போன்ற சளி ஆகியவை குணமாகும்.

தோலுரித்த வெள்ளைப் பூண்டு நான்கினை எடுத்து பாலில் போட்டு வேகவைத்து, பூண்டை சாப்பிட்டு பாலையும் குடித்துவிட குளிர்காலத்தில் அதுவும் இரவு நேரங்களில் ஏற்படும் ஆஸ்துமா தொந்தரவு குறையும்.

வெற்றிலைச் சாறுடன் இஞ்சிச்சாறும் தேனும் கலந்து சாப்பிட இரைப்பிருமல் தீரும்.

திப்பிலி, மஞ்சள், காசாலை ஆகியவற்றை சேர்த்து இடித்து தேன் கலந்து காலை, மாலை அரை தேக்கரண்டி வீதம் நான்கு நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.

திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை எடுத்து அரைத்து நீர் சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி அரை தேக்கரண்டி எடுத்து தேன் சேர்த்து நான்கு நாட்கள் உண்ண சுவாசகாசத்தில் ஏற்படும் சளிக்கட்டு குணமாகும்.

நஞ்சறுப்பான் இலை இரண்டு, மிளகு ஐந்து இவை இரண்டையும் சேர்த்து தினம் காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும்.

ஆடாதோடை இலையின் ரசம் ஒரு பங்கு, தேன் அல்லது இஞ்சிச் சாறு அரைப் பங்கு இரண்டையும் ஒன்று சேர்த்து மெழுகு பதமாய்க் காய்ச்சி, இரண்டு முதல் நான்கு குன்றியளவு, நாள் ஒன்றுக்கு மும்முறை கொடுக்க இரைப்பு, ஈனை, இருமல், இளைப்பு நோய் போன்றவைகள் தணியும்.

சாம்பிராணியை வெந்நீர் விட்டரைத்து மேலுக்குப் போட உடல் சூடாகும். இதனாலும் நாட்பட்ட இரைப்பு, தீரும்.asthma 2707595f

Related posts

ரத்தத்தில் ஒளிந்திருக்கும் 3 மாத ரகசியம்!

nathan

பேச்சை குறையுங்கள்… பிரச்சனைகள் தீரும்…

nathan

மனித உறவுகள் சீராக இருக்க….. A to Z

nathan

கர்ப்பம் அடைவதற்கு தடையாக பெண்கள் நம்பும் மூடநம்பிக்கைகள்

nathan

சிறுநீரில் ரத்தம்

nathan

பல்களிலுள்ள மஞ்சள் நிற காவிகளை போக்க நேச்சுரல் டூத் பேஸ்ட் தயாரிப்பது எப்படி தெரியுமா?

nathan

சினைப்பை கட்டிகள் எப்படி உருவாகிறது? தடுக்கும் வழிமுறைகள்

nathan

சினிமாவோடு வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி கொள்ளாதீர்கள்

nathan

வீட்டுக்கு தேவை வெளிச்சம்

nathan