201612161049547420 Chicken potato cutlet SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான சிக்கன் – உருளைக்கிழங்கு கட்லெட்

குழந்தைகளுக்கு சிக்கன் மிகவும் பிடிக்கும். சிக்கன், உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

சூப்பரான சிக்கன் – உருளைக்கிழங்கு கட்லெட்
தேவையான பொருட்கள் :

சிக்கன் – 500 கிராம்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
மைதா மாவு – 3 ஸ்பூன்
பிரட் தூள் – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :

* எலும்பில்லாத சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய் சேர்த்து கிளறவும்.

* பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும்.

* அடுத்து அதில் சிக்கனை சேர்த்து பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லித்தழை, எலுமிச்சை சாறு, மசித்த வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

* ஆறியதும் அதிலிருந்து சிறிய பகுதி எடுத்து அதனை பந்து போன்று உருட்டி வேண்டிய வடிவில் தட்டி வைக்கவும்.

* மைதா மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* பின்பு செய்து வைத்திருக்கும் கட்லெட்டை மைதா மாவில் முக்கி எடுத்து புரட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும். அனைத்து கட்லெட்டுகளையும் மாவில் முக்கி எடுத்து அவற்றை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.

* பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கட்லெட்டை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* சூப்பரான சிக்கன் – உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.201612161049547420 Chicken potato cutlet SECVPF

Related posts

மனோஹரம்

nathan

மீன் கட்லெட் செய்வது எப்படி ? How to Make Fish Cutlet?

nathan

சுரைக்காய் சப்ஜி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

nathan

பால் அப்பம்

nathan

சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்

nathan

மொறுமொறுப்பான… பிரட் பஜ்ஜி

nathan

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

nathan

Brown bread sandwich

nathan