தோலிற்கு அடியிலிருக்கும் டெர்மிஸ் அடுக்கு விரியும்போது கொழுப்புகள் படிந்து அதற்கேற்றவாறு தசைகள் விரிந்து நெகிழ்வுத்தன்மை தரும். ஆனால் சட்டென்று தசை சுருங்கும்போது, டெர்மிஸ் உடைந்து போவதால், அங்கே தழும்புகள் உண்டாகின்றன.
இது கர்ப்பிணிகள் எல்லாரும் ஏற்படும். தவிர்க்க முடியாதது. அதேபோல், உடல் பருமனானவர்கள் தங்கள் எடையை குறைக்கும்போதும், தோள்பட்டை, தொடை, ஆகிய பகுதிகளில் இவ்வாறு ஸ்ட்ரெச் மார்க் உண்டாகும்.
இதனை கர்ப்ப காலத்திலேயே ஓரளவு தடுக்கமுடியும். எப்படியென்றால், சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மை தரும்போது, அவ்வாறு டெர்மிஸ் அடுக்கு உடையாமல் தழும்புகளை வரவிடாமல் தடுக்கும்.
கர்ப்ப காலத்தில் விட்டமின் ஈ எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் மஞ்சள் தடவிக் கொண்டு வந்தால் இதனை தடுக்கலாம்.
சரி வந்த பின் எப்படி தடுக்கலாம் என்று சந்தேகம் வரலாம். இங்கே கூறப்பட்டுள்ள அழகுக் குறிப்பு பிரசவ தழும்பு வந்தபின் எப்படி குறைக்கலாம் என்பதே.
குழந்தை பிறந்த ஒருவாரத்திலிருந்து வயிற்றில் போதிய பராமரிப்பு தந்தால், பிரசவ தழும்புகள் வரவிடாமலே தடுக்கலாம் அல்லது இதனை எந்த காலத்தில் செய்தாலும் பலன் தரக் கூடியது. எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை : மாம்பழ பட்டர் – அரை கப் தேங்காய் எண்ணெய் – கால் கப் விட்டமின் ஈ – 1 கேப்ஸ்யூல் தமனு எண்ணெய்(tamanu oil) – 2 டேபிள் ஸ்பூன் பாதாம் போன்ற ஏதாவது ஒரு வாசனை எண்ணெய்- சில துளிகள்
ஒரு கிண்ணத்தில் மாம்பழ பட்டரைஉருக்கி அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து லேசாக சூடேற்றுங்கள். நேரடியாக அடுப்பில் வைக்க வேண்டாம். நீரில் கிண்ணத்தை வைத்து அதன் மூலம் சூடுபடுத்துங்கள்.
பின்னர் இதில் தமனு எண்ணெய், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் ஏதாவது வாசனை எண்ணெயை கலந்து நன்றாக கலக்கி ஒரு காற்று பூகா பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை தினமும் காலை இரவு என இரு வேளைகளிலும் வயிற்றில் மற்றும் தழும்பு உள்ள பகுதிகளில் தடவி வந்தால், விரைவில் பலன் தெரியும்.