27.9 C
Chennai
Tuesday, Nov 19, 2024
201612141053300101 aloo 65 recipe SECVPF
சைவம்

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு – 65

உருளைக்கிழங்கை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான ஆலு – 65 செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு – 65
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய் வற்றல் – 4
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
இஞ்சி – அரை அங்குலத் துண்டு
தயிர் – கால் கப்
மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
சோள மாவு – ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை ஸ்பூன்
எண்ணெய் – முக்கால் கப்


செய்முறை :

* உருளைக்கிழங்கை பாதியளவு வேக வைத்து சதுரமான துண்டுகளான வெட்டிக்கொள்ளவும்.

* பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

* இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.

* பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

* கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

* மைதா மாவு மற்றும் சோள மாவு இரண்டையும் தனித்தனியாக சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

* மிக்ஸியில் மிளகாய் வற்றல், நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைகிழங்கு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், பேக்கிங் பவுடர், உப்பு, அரைத்த விழுது போட்டு உருளைக்கிழங்குடன் விழுது ஒன்றாக சேரும் படி நன்கு பிரட்டி விடவும்.

* பிரட்டிய பிறகு அதில் தயிர், சோள மாவு, மைதா மாவு போட்டு நன்றாக பிரட்டி வைத்து, அதை அரைமணி நேரம் ஊற விடவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு சிவந்து பொன்னிறம் ஆனதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.

* மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளித்த பின் அதில் வறுத்த உருளைக்கிழங்கை போட்டு ஒரு நிமிடம் பிரட்டி இறக்கி வைக்கவும்.

* சூடான ஆலு 65 தயார். இது ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதே போல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 201612141053300101 aloo 65 recipe SECVPF

Related posts

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

குதிரைவாலி அரிசி பிரியாணி

nathan

கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி

nathan

காராமணி மசாலா கிரேவி

nathan

சிறுகிழங்கு பொரியல்

nathan

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

nathan

டிரை ஃப்ரூட்ஸ் புலாவ்

nathan

உருளைக்கிழங்கு மோர் குழம்பு

nathan

ஜுரா ஆலு

nathan