22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
qd6dnsg
கர்ப்பிணி பெண்களுக்கு

பிறந்த குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் தாய்ப்பால்

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தாய்ப்பால் தினவிழா சேலம் கோரிமேடு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மணிமொழி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பிரியா தேவி, வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மருத்துவர் ரஜினிதிலக், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது வரப்பிரசாதம். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது. எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை தவிர்க்கவோ, நிறுத்தவோ கூடாது. தற்போது, பணிக்கு செல்லும் பெண்களாலும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களாலும் தாய்ப்பால் வழங்க முடிவதில்லை. இதற்காக அரசு மருத்துவமனைகளிலேயே தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இரட்டை குழந்தைகள் பிறக்கும் போது, தாய்ப்பால் வழங்குவதில் பெண்களுக்கு சிக்கல் ஏற்படலாம். அதுபோன்ற சூழ்நிலையில், இரு குழந்தைகளுக்கும் ஒரே சமயத்தில் தாய்ப்பால் வழங்குவது ஆபத்தானது. தாய்களுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு அளித்து பின்னர், காலம் தாழ்த்தி மற்றொரு குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க வேண்டும். இவ்வாறு மருத்துவர் ரஜினிதிலக் தெரிவித்தார். விழாவில், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.qd6dnsg

Related posts

பிரசவ கால வலிகள்

nathan

தாய் பாலுக்கு இணையான கழுதை பால் – ஆரோக்கிய நன்மைகள்!

nathan

கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

வெளிப்படையாக யாரும் கூறாத பிரசவத்தின் போது சந்திக்கும் கஷ்டங்கள்!!!

nathan

பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன?

nathan

தாய்மார்களே குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கோபப்படாதீங்க

nathan

குழந்தையின் வளர்ச்சி!

nathan

முத்துப்பிள்ளை கர்ப்பம்

nathan

தாய்மைக்குப் பிறகும் ஃபிட்டாகலாம்!

nathan