32.5 C
Chennai
Tuesday, Jul 15, 2025
honey 06 1470480745
முகப் பராமரிப்பு

5 நிமிடத்தில் முகத்திற்கு பொலிவு தரும் வாழைப்பழம் !!

எல்லாருமே சிவந்த நிறமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். சிவப்பு என்பது ஒரு நிறம் அவ்வளவுதான். அது மட்டுமே அழகை நிர்ணயிப்பதில்லை. எந்த நிறத்திலும் பொலிவு இருந்தால் ஒரு ஈர்ப்பு வரும். அவ்வகையில் உலகமே போற்றிய கிளியோபாட்ரா கருப்புதான். ஆனால் அவர் தன் சரும பொலிவை மங்காமல் வைத்திருந்ததால்தான் அவரின் அழகு உலகம் போற்றியது. அப்படி உங்கள் சருமத்தில் பளபளப்பையும் போஷாக்கையும் தரும் இந்த குறிப்புகளை பார்க்கலாமா?

தேன் மற்றும் க்ரீன் டீ : க்ரீன் டீ டிகாஷனை எடுத்து, அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் முகத்தில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவுங்கள். முகத்தில் புது பொலிவு வரும்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு சருமத் துவாரங்களை சிறிதாக்கும். சருமத்தை இறுகச்செய்யும். சுருக்கங்களைப் போக்கும். சிறிது தயிருடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வாருங்கள். முகத்தில் சூரிய கதிர்களால் உண்டாகும் கருமை மறைந்து சருமம் ஒரே மாதிரியான நிறத்திற்கு மாறும்.

வாழைப்பழம் : உங்களுக்கு ஏதாவது விசேஷங்களுக்கு போக வேண்டும். பார்லர் செல்லவும் நேரமில்லை. உடனடியாக எப்படி பொலிவான தோற்றத்தை பெறுவது? இதை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத்தை மசித்து அதில் தேன் கலந்து முகத்தில் பேக் போல போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

தக்காளி பேக் :
உங்கள் முகத்தில் ஆங்காங்கே மரு, தழும்பு, முகப்பரு, கருமை என சுத்தமாக இல்லாவிட்டால் இந்த குறிப்பு கை கொடுக்கும். அரை துண்டு தக்காளியை மசித்து அதோடு, மஞ்சள் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் காய்ந்ததும், முகத்தை கழுவினால் முகம் பிரகாசமாய் இருக்கும். வாரம் இருமுறை செய்தால், சருமம் மிகவும் சுத்தமாகி, முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

பால் மற்றும் குங்குமப் பூ :
குங்குமப் பூவை பொடி செய்து சிறிது பாலில் குழைத்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் அட்டகாசமான பொலிவு கிடைக்கும். சருமம் மிக மென்மையான அழகாக மாறும்.
honey 06 1470480745

Related posts

இந்த 2 பொருட்கள் முகத்தில் உள்ள சுருக்கத்தை மாயமாய் மறையச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

கருவளையம் எளிதாக மறைக்கப்பட அற்புதமான வைத்திய முறை !!

nathan

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

முகப்பொலிவைத் தரும் இலைகள்

nathan

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

nathan

முகம் பொலிவடைய வேண்டுமா?

nathan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்

nathan

பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக் !!!

nathan

சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ்ஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan