28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
honey 03 1470202148
முகப் பராமரிப்பு

மாசின்றி உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்கும் க்ரீன் டீ ஸ்க்ரப் !!

க்ரீன் டீ உடல் எடை குறைக்க, இளமையாக இருக்க தினமும் குடிக்க வேண்டும் என எல்லாரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது சருமத்திற்கும் பொலிவை தரக் கூடியது.

மிருதுவான கிளியரான சருமம் யாருக்குதான் பிடிக்காது. அப்படி அழகான சருமம் கிடைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? தினமும் வெறும் 10 நிமிடங்கள் செலவிடுங்கள். உங்கள் சருமத்திற்கு எந்த வித பாதிப்பிலாமல் இளமையாக காப்பாற்றிடலாம்.

முதலில் உங்கள் சருமத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் களைய வேண்டும். அதற்கு ஸ்க்ரப் உபயோகித்திடுங்கள்.

ஸ்க்ரப் செய்வதால் உங்கள் சருமம் பாழாகாது, சரும துவாரங்களில் அடைத்திருக்கும் அழுக்குகளை அகற்றவே இதனை உபயோகப்படுத்துகிறோம். அதன் பின்னர் மாய்ஸ்ரைஸர் உபயோகித்திடுங்கள் .

இவை இரண்டும் உங்கள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. மிக முக்கியமான விஷயம் இயற்கையான ஸ்க்ரப், மாய்ரைஸரே உங்கள் சருமத்திற்கு எந்த வித கேடையும் தராது.

அப்படி உங்கள் சருமத்தை அழகுபடுத்தும் குறிப்புதான் இது. வீட்டிலேயே இந்த ஸ்க்ரப்பை செய்து அதன் பயனை முழுவதும் பெறுங்கள்.

தேவையானவை : க்ரீன் டீ பேக் – 2 தேன் – 1 டீ ஸ்பூன்

க்ரீன் டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் 1 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் டீ பேக்கிலிருந்து டீத்தூளை பிரித்தெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தேயுங்கள். நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்தவாறு தேய்க்க வேண்டும்.

பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுங்கள்.

இவ்வாறு தினமும் செய்தால் மாசின்றி உங்கள் முகம் ஜொலிக்கும். முயன்று பார்த்து கருத்திடுங்கள்.

honey 03 1470202148

Related posts

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி…!!!

nathan

இழந்த நம் அழகை மீண்டும் பெற கூடிய குறிப்புகள்!….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… 35-வயதில் முகம் பளிச்சிட

nathan

அழகான கருமையான புருவங்கள் வேண்டுமா ? அப்ப இத படிங்க!!

nathan

எண்ணெய் சருமத்தை தடுப்பது எப்படி?

nathan

முகத்தை பளபளப்பாக்குவதற்கு ஒரு துளி தயிர் போதும் தெரியுமா?

nathan

உங்கள் புருவத்தின் தோற்றத்தை எப்படி திருத்திக் கொள்ளலாம்?

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையாக தெரிய வேண்டுமா….அப்ப தினமும் செய்யுங்க…

nathan