சிலருக்கு கூந்தல் நீண்டு இடுப்புக்கும் கீழே தவழும். பார்க்க பொறாமை மட்டும்தான் பட முடியும். என்ன முட்டினாலும் கூந்தல் வளரவில்லையே என ஏக்கம் சூழ்ந்துள்ள நிறைய பெண்கள் உள்ளார்கள்.
அதற்கு காரணம் கூந்தலின் வேர்கால்கள் போதிய அளவிற்கு தூண்டப்படாமல் இருப்பதுதான். திரி தூண்ட எப்படி எண்ணெய் தேவையோ, அப்படி வேர்கால்களையும் தூண்டிவிட்டால் கூந்தல் வளர்ச்சி ஆரம்பிக்கும். முடி உதிர்தல் ஒருபுறம், குச்சி போன்று கூந்தல் ஒருபுறம் என கவலைப்படுவதை விட்டுவிட்டு இன்றே கூந்தலை பராமரிக்க முனைந்திடுங்கள்.
நீங்கள் கூந்தல் வளர நிறைய அழகுக் குறிப்புகளை பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அவை சரியாக உபயோகமாகவில்லை என நினைக்கிறீர்களா?
அப்படியென்றால் நீங்கள் பொறுமையிழந்து உங்கள் முயற்சியினை பாதியிலேயே விட்டிருப்பீர்கள். காரணம் கூந்தல் வளர்ச்சி ஒரு சமயத்தில் திடீரென நின்று போயிருக்கும். இனி வளராது என நினைத்திருப்பீர்கள்.
ஆனால் கூந்தல் திரும்பவும் வளர சிறிது காலம் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி மரபணுக்கள் கொண்டிருக்கும். ஆகவே முயற்சியை தளர விடாமல் இந்த குறிப்பினை தொடர்ந்து வாரம் ஒருமுறை பயன்படுத்துங்கள். ஒன்றன்பின் ஒன்றாக முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தி உண்டாகி, முடி நீளமாக வளர்வதை காண்பீர்கள்.
இஞ்சி எண்ணெய் : தேவையானவை : இஞ்சி – பெரிய துண்டு எலுமிச்சை – 1 நல்லெண்ணெய் – 1 கப்
இஞ்சி சற்றே பெரிய துண்டை எடுத்து தோல் நீக்கி துருவி அதிலிருந்து சாறெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த சாற்றில் தோராயமாக 1 எலுமிச்சை பழச் சாறு மற்றும் நல்லெண்ணெய் கூந்தலுக்கேற்ப எடுத்து, இவற்றுடன் கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை தலையில் தேய்த்து, மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் கூந்தலை அலசலாம்.
இந்த எண்ணெய் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். கூந்தலின் வேர்க்கால்களுக்கு பலம் தரும். மிருதுவான நீளமான கூந்தல் நாளடைவில் கிடைக்கும்.