201612091143159697 symptoms of miscarriage SECVPF
மருத்துவ குறிப்பு

கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பத்தின் ஆரம்ப மூன்று மாத காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களுக்கு எளிதில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் ஒரு பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அறிவது என்பது சற்று கடினம்

ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணிற்கும் அதற்கான அறிகுறிகள் வேறுபடும். இங்கு கருச்சிதைவிற்கான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

கருச்சிதைவிற்கான முதல் அறிகுறி இரத்தப்போக்கு. சில நேரங்களில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கரு உருவாவதால் இரத்தக்கசிவு ஏற்படுவது சாதாரணம். ஆனால் தொடர்ச்சியாக இரத்தக்கசிவு ஏற்பட்டால், சற்று தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

இது மற்றொரு அறிகுறி. கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் கடுமையான வலியை உணர்வதோடு, இரத்தக்கசிவும் ஏற்பட்டல், அது கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். இம்மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

யோனியில் இருந்து வெள்ளைக் கசிவு ஏற்பட்டால், அது கருச்சிதைவு ஏற்படப் போவதற்கான ஆரம்ப அறிகுறியாகும். அதுவும் இந்த வெள்ளைப்படிதல் இரத்தக்கட்டிகளுடனும், துர்நாற்றத்துடனும் இருந்து, யோனியில் அரிப்புக்களை ஏற்படுத்தினால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும்.

கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் கருப்பை சுருக்கங்கள் ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். இம்மாதிரியான நேரத்தில் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். 201612091143159697 symptoms of miscarriage SECVPF

Related posts

ஹார்மோன் குறைவால் ஏற்படும் நோய்கள்

nathan

வேதனை தரும் மூட்டு வலியை சந்திப்பவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் இப்படித்தான் தயாராகிறது…

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவுகள் உங்க மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும்!

nathan

இதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.

nathan

வேலை பாக்கும் போது கூட தூக்கம் வருதா? முதல்ல இத படிங்க…

nathan

மூக்கு ஒழுகல் தொல்லை தாங்க முடியலையா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

காச நோயா…கவலை வேண்டாம்

nathan

எண்ணிலடங்கா நோய்களை போக்கும் துளசி

nathan