28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sinus
மருத்துவ குறிப்பு

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்

* ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.
சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்
* தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
* தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க் கோர்வை போன்றவை சரியாகும்.
* குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
* கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும். இந்த இயற்கை முறைகளை பின்பற்றி சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்யலாம்.sinus

Related posts

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி?

nathan

மருத்துவப் பயன் நிறைந்த வெந்தயம்

nathan

இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்… ஒவ்வொரு நாளும் இனிய நாளே!

nathan

அலர்ஜி… விரட்ட அருமையான வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் டி குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

மனித மூளையின் ரகசியம் அறிந்து கொள்ளுங்கள்

nathan

வாய்ப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய் தீநீர்

nathan

கீரை டிப்ஸ்..

nathan