29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
29 1469778137 6 facepacksdfds
முகப் பராமரிப்பு

ஒரே நாளில் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பிரகாசமாக்கும் ஃபேஸ் பேக்குகள்!

இன்றைய மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலால் நம் சரும ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பலரும் முகப்பரு, சரும சுருக்கம், பொலிவிழந்த முகம் போன்ற பிரச்சனையால் அதிகம் சிரமப்பட்டு வருகின்றனர்.

நாம் அழகாக ஜொலிக்க வேண்டுமானால், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடிக்கடி நம் முகத்திற்கு ஒருசில பொருட்களைக் கொண்டு முகத்திற்கு அடிக்கடி பராமரிப்புக்களை கொடுத்து வர வேண்டும்.

இங்கு பொலிவிழந்து காணப்படும் முகத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வெளிக்காட்டும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கற்பூரம் ஓட்ஸ் மாஸ்க் 1/2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1/2 டீஸ்பூன் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து, ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெங்காயம் தேன் மாஸ்க் 1 வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது தேன் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் சுருக்கம், முதுமைக் கோடுகள் மறைந்து, முகம் இளமையுடன் காணப்படும்.

பூண்டு முட்டை மாஸ்க் 1 டீஸ்பூன் வெண்ணிற களிமண், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் பேஸ்ட் செய்த 1 பூண்டு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவவும். இந்த செயலால் முகத்தில் இருக்கும் பருக்கள், அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் காட்சியளிக்கும்.

கெல்ப் ஃபேஸ் பேக் 1 டேபிள் ஸ்பூன் கெல்ப் என்னும் கடல் பாசி வகை பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் அழகாகவும், பிரகாசமாகவும் இருப்பதைக் காணலாம்.

ப்ளம்ஸ் ஃபேஸ் பேக் ப்ளம்ஸ் பழத்தை அரைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த செயலால் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி, பொலிவிழந்து காணப்படும் முகம் பொலிவாகும்.

பாதாம் தேன் மாஸ்க் 2 டீஸ்பூன் பாதாம் பொடியுடன், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் மென்மையாகவும், பொலிவோடும் காட்சியளிக்கும்.

ஆப்பிள் ஃபேஸ் பேக் 1/2 ஆப்பிளை அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 முட்டை மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.29 1469778137 6 facepacksdfds

Related posts

சருமத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

nathan

த்ரெட்டிங் செய்த பின் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை -தெரிந்துகொள்வோமா?

nathan

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

காய்கறி பேஷியல்:

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

எப்பவும் அழகா இருக்க

nathan

முக அழகை கெடுக்கும் தோல் சுருக்கத்தை போக்க சில வழிகளை பார்க்கலாம்…

nathan