aval puttu
சிற்றுண்டி வகைகள்

சிவப்பு அவல் புட்டு

தேவையான பொருட்கள்:-

சிகப்பு அவல் ——1கப்
சர்க்கரை ——–1/2 கப்
தேங்காய் துருவல் —-1/4 கப்
ஏலக்காய் பொடி —–1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு ——4
நெய் ———-1 டீஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை:-

முதலில் அவலை வெறும் வாணலியில் போட்டு சிறிது சூடு படுத்தி ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவையாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.

முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் .

மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் 11/4 கப் நீர் விட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு ரவையாக பொடித்த அவலை சேர்த்து கலந்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

அவல் நன்றாக வெந்து பொல பொலவென வந்ததும் அடுப்பை அணைத்து அதில் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், வறுத்த முந்திரி பருப்பு ,நெய் சேர்த்து கலந்து நன்றாக ஆறவிடவும்.

நன்றாக ஆறியதும் அவரவர் ருசிக்கேற்ப சர்க்கரையை சேர்த்து கலந்து பரிமாறவும்.

செய்வதற்கு சுலபமான அதிக சத்துக்கள் நிறைந்த இந்த அவல் புட்டு காலை (அ) மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :-

இனிப்பை அவரவர் ருசிக்கேற்ப கூட்டியோ (அ ) குறைத்தோ சேர்த்துக்கொள்ளலாம்.

வெல்லத்தை சேர்த்தும் இந்த புட்டை செய்யலாம்.

வெல்லம் சேர்த்து செய்வதாக இருந்தால் வாணலியை அடுப்பில் வைத்து நீரில் வெல்லத்தை போட்டு கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு பொடித்த அவலை சேர்த்து நன்றாக பொல பொல வென வெந்ததும் தேங்காய் துருவல்,ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, நெய் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.aval puttu

Related posts

கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா

nathan

பச்சை பட்டாணி கச்சோரி

nathan

பொரி உருண்டை

nathan

கறிவேப்பிலை பொடி மினி இட்லி

nathan

உப்புமா பெசரட்டு

nathan

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை

nathan

எளிமையாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி

nathan

பட்டர் நாண்

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan