29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
fridrice
அசைவ வகைகள்

சைனீஸ் ப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 500 கிராம்
சுத்தம் செய்த இறால் – 300 கிராம்
புரோசின் பீஸ் (green peas) – 100 கிராம்
முட்டை – 2
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 3 பற்கள்
அஜினோமோட்டோ – 1/2 தேக்கரண்டியிலும் குறைந்தளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 நெட்டுக்கள்
கிராம்பு – 4
கறுவா – 2
ஏலக்காய் – 4

செய்முறை :
மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசியை கழுவி அதனுடன் ஏலக்காய், கறுவா, கிராம்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து விரும்பினால் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது மாஜரினும் சேர்த்து 700 மி.லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். அப்போது தான் சாதம் உதிர் பதமாக இருக்கும்.

இறாலை சிறுத் துண்டுகளாக நறுக்கி கால் தேக்கரண்டி உப்பு மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளும் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி அதில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து அடித்து அப்பமாகப் பொரித்து எடுத்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டை தட்டிப் போட்டு பிரட்டி வைத்திருக்கும் இறாலையும் போட்டு நன்கு வதக்கவும்.

இறால் நன்கு வதங்கியதும் அதனுடன் பீஸை போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் கறிவேப்பிலை, மீதமுள்ள உப்பு, மிளகுதூள், அஜினோமோட்டோ போட்டு பிரட்டி விடவும். அஜினோமோட்டோ சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும் சிறிதளவேனும் அதிகமானாலும் புளிப்பு தன்மை அதிகமாகிவிடும்.

இந்த கலவையில் வேக வைத்து ஆற வைத்த சாதத்தையும், துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முட்டையையும் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிரட்டி விட்டு சூடாகியதும் இறக்கவும். சமைத்து முடியும் வரை குறைந்த தீயிலேயே வைத்திருக்கவும்.

சுவையான சைனீஸ் ப்ரைட் ரைஸ் ரெடி. இதனை மட்டன் அல்லது சிக்கன் பிரட்டல், அவித்த முட்டை சேர்த்துப் பரிமாறவும். இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் திருமதி. ரஸியா அவர்களின் குறிப்புகளிலிருந்து பார்த்து சில மாற்றங்களுடன் செய்த ப்ரைட் ரைஸ் இது.
fridrice

Related posts

மசாலா மீன் ப்ரை

nathan

சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

சிக்கன் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்…!

nathan

இறால் மசால்

nathan

செட்டிநாடு எலும்பு குழம்பு

nathan

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

nathan

ஓவனில் வறுக்கப்பட்ட சிக்கன்

nathan

சைனீஸ் எக் நூடுல்ஸ் செய்ய வேண்டுமா?

nathan