27 1477567021 5 broccoli
எடை குறைய

எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!

நம்மில் நிறைய பேர் உடல் பருமனைக் குறைப்பதற்காக டயட்டில் இருப்போம். ஆனால் அப்படி டயட்டில் இருக்கும் போது, பலருக்கும் எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், எதை உட்கொள்ளக்கூடாது என்று தெரியாது. அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே நீங்கள் எடையைக் குறைக்க டயட்டில் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுங்கள். இதனால் உங்கள் எடை வேகமாக குறைவதோடு, உடலுக்கு அன்றாடம் கிடைக்க வேண்டிய சத்துக்களும் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பரங்கிக்காய் பரங்கிக்காயில் கரோட்டினாய்களான பீட்டா-கரோட்டீன் உள்ளது. இச்சத்து மெட்டபாலிச பிரச்சனை இருந்தால், அதை சரிசெய்ய அவசியமான ஒன்று. மேலும் இதில் கலோரிகள் குறைவு. அதுவும் ஒரு கப் பரங்கிகாயில் 30 கலோரிகள் தான் உள்ளது. எனவே இதனை டயட்டில் இருக்கும் போது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆப்பிள் ஆப்பிளில் உள்ள பெக்டின், கரையக்கூடிய நார்ச்சத்து. எனவே ஆப்பிளை சாப்பிட்டால், அது மெதுவாக செரிமானமாவதோடு, சர்க்கரை உணவுகளின் மீதுள்ள ஆர்வத்தைக் குறைக்கும். மேலும் இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீயாக்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, உடல் எடை குறைவதற்கும் உதவியாக இருக்கும்.

பட்டை டயட்டில் இருக்கும் போது சாப்பிடும் பழம் மற்றும் காய்கறிகளாலான சாலட் மற்றும் ஜூஸ்களில் சிறிது பட்டை தூளை சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள பாலிஃபீனால்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்துக் கொள்ளும்.

காலிஃப்ளவர் 1 கப் காலிஃப்ளவரில் 2 கிராம் நார்ச்சத்தும், 27 கலோரிகளும் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. இந்த காய்கறியை டயட்டில் இருக்கும் போது சாப்பிட்டால், உடல் எடை குறைவதைக் காணலாம்.

ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் நார்ச்சத்தும், கால்சியம் சத்தும் உள்ளது என்பது தெரியுமா? இத்தகைய ப்ராக்கோலியை ஒருவர் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது சாப்பிட்டால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பசலைக்கீரை பசலைக் கீரையில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் கே போன்றவை வளமாக உள்ளது. மேலும் இதில் உள்ள நோயை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பீட்டா-கரோட்டீன், வைட்டமின் சி மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும் பைட்டோ-கெமிக்கலான லுடீன் போன்றவை உள்ளது. இந்த கீரையை எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கும் போது சேர்க்க சிறப்பான பலனைப் பெறலாம்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். எனவே ஆரஞ்சு பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

27 1477567021 5 broccoli

Related posts

ஒரு மாதத்தில் தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

nathan

உங்கள் துணையுடன் சேர்ந்து உடல் எடையை குறைக்கும் பயிற்சிகள்

nathan

பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

nathan

ஊளைச்சதைக் கோளாறு

nathan

உடல்பருமன் குறைக்கும் உணவுகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

உடற்பயிற்சியும், டயட்டும் இல்லமால் எடையை குறைப்பது எப்படி?..

sangika

தண்ணீருக்கு மாற்றாக 15 பானங்கள் எடையை குறைக்கும் அதிசயம் தெரியுமா !

nathan

இதற்குப் பெயரே 100 மைல் டயட்…..

sangika

இந்த டயட் அட்டவணையை மட்டும் பின்பற்றுங்க 7 நாட்களில் 10 கிலோ குறைக்கலாம்?

nathan